பெரியார் பெருந்தொண்டர் எஸ்.பி.மெய்வேல் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

1 Min Read

எடப்பாடி, மே 23- எடப்பாடி, கவுண்டம்பட்டி காட்டுவளவில் குடியிருக்கும் பெரியண்ணபக்தர் அவர்களின் மகன் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.பி.மெய்வேல் (வயது 90) 20.5.2026 அன்று மதியம் 12.30 மணிக்கு இயற்கை எய்தினார். அன்று மாலை 3 மணிக்கு அவரது இல்லத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் கா.நா.பாலு சென்று உடலுக்கு கழகக் கொடியினைப் போர்த்தி மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

உடன் கோவி.அன்புமதி, மாவட்ட ப.க. தலைவர், சா.ரவி நகரத் தலைவர், சி.மெய்ஞான அருள் நகரச் செயலாளர், ஆர்.எம்.சண்முகசுந்தரம் ஒன்றியத் தலைவர் ஆகியோர் வீரவணக்க முழக்கமிட்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

21.5.2026 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் மாவட்ட கழகத் தலைவர் கா.நா.பாலு, மாவட்ட காப்பாளர் சி.சுப்பிரமணியன், ப.அண்ணாதுரை, ஏழுமலை, சா.ரவி, சி.மெய்ஞான அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறைந்த சுயமரியாதைச் சுடரொளி எஸ்.பி.மெய்வேல் அவர்களுக்கு ஒரு மகன், அய்ந்து மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் ராகு காலத்திலும், எமகண்டத்திலும் திருமணங்களை நடத்தி, ஊர் மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சுயமரியாதைச் சுடரொளி எஸ்.பி.மெய்வேல் அவர்களின் இறுதி நிகழ்வுகள் அனைத்தும் எந்தவிதமான மூடசடங்குகள் எதுவும் இல்லாமல் நடைபெற்றது. எளிய முறையில் பாடை கட்டி கழகத் தோழர்கள் உடலை சுமந்து வந்து அடக்கம் செய்தனர். எஸ்.பி.மெய்வேல் நினைவிடத்தில் மாவட்ட கழகத் தலைவர் கொடியினை நட்டு வைத்து வீரவணக்க முழக்கமிட்டனர். அனைவரும் வீர முழக்கமிட்டனர். உறவினர்கள் நன்றி கூற இறுதி நிகழ்ச்சி நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *