தமிழ்நாடு அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு முதலிடம்! தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தொடர்ந்து அவமரியாதை! தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்!

சென்னை, மே 22– ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டு மீண்டும் வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்டுள்ளது. அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்குத் தள்ளிய த.வெ.க. அரசுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் பாடப்படுவது வழக்கமாகும். முந்தைய தி.மு.க. ஆட்சியில் அப்போதைய ஆளு நர் பல்வேறு நெருக்கடிகள் கொடுத்தும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்பட்டது. இறுதியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட்டது.

இதனால், ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தனது உரையை வாசிக்காமல் ஆளுநர் திரும்பி சென்ற நிகழ்வுகளெல்லாம் அரங்கேறியது. ஆனால் அதற்கெல்லாம் அஞ்சாத திமுக அரசு, தமிழ்நாட்டின் மரபை மாற்றாமல் தொடர்ந்து பின்பற்றியது.

ஆனால், அதற்கடுத்து வந்த த.வெ.க அரசோ, புதிய ஆளுநரின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, தமிழ்நாட்டின் மரபை மீறி செயல்பட்டு வருகிறது. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பின்போது, ஆளுநரின் உத்தரவுக்கு ஏற்ப தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டு முதலில் வந்தே மாதரம் பாடலும், இரண்டாவதாக தேசிய கீதமும் பாடப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பும், கண்டனமும் எழுந்தது.

இதனையடுத்து விளக்கம் கொடுத்த த.வெ.க., அரசு, தமிழ்நாட்டின் மரபு இனி மீறப்படாது என்று உறுதியளித்தது. ஆனால், நேற்றும் (21.5.2026) அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டு மீண்டும் வந்தே மாதரம் பாடல்முதலில் பாடப்பட்டுள்ளது.

அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்குத் தள்ளிய த.வெ.க. அரசுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு அடிபணிந்து, அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை த.வெ.க. அரசு பின்னுக்குத் தள்ளிவிட்டதாகக் குற்றச்சாட்டியுள்ளனர். தமிழ்த்தாயை பின்னுக்குத் தள்ளியது தான் புதிய மாற்றமா? என பல்வேறு தரப்பினரும் த.வெ.க., அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

“மாற்றம்” என்று வேடமிட்டு வந்த வர்கள், தமிழர்களின் உயிர்மூச்சான “தமிழ்த்தாய் வாழ்த்தை” மூன்றாம் பட்சமாக நிறுத்தித், தமிழ்த் தாயின் முகத்தில் கரியைப் பூசியுள்ளனர்! என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். மரபுகளைச் சிதைத்துத் தமிழை அவ மதிப்பதுதான் நீங்கள் ஊரெல்லாம் கூவிய மாற்றமா? என த.வெ.க. அரசை பலரும் விமர்சித்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளியது போல், தமிழ்நாட்டையும் தள்ளிவிடாதீர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதங்கம் தெரி வித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் அடையாளமாகவும், பண்பாட்டு விழுமியமாகவும் திகழும் தமிழ்த்தாய் வாழ்த்தை அரசு விழாவின் தொடக்கத்திலேயே பாடி சிறந்பிப்பதே முறையானது என்று தெரிவித்துள்ளனர். பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில் கூட, அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் பாடப்படுவதில்லை. மேற்குவங்கத்தில் பாஜக அரசு பதவியேற்றபோது கூட அங்கு வந்தே மாதரம் பாடல் ஒலிக்கவில்லை. வந்தேமாதரம் ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட, மதச்சார்புடைய பாடல் என்பதால் நாட்டின் தேசிய கீதமாக இருக்க முடியாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!

தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர்- ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. அமைப்புச் செயலாளர்
ஆர்.எஸ்.பாரதி அவர்களின் கண்டனம் வருமாறு:

ஆளுநர் மாளிகையில் நடை பெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டதை போலவே தமிழ்நாடு எல்லா வகையிலும் இனிமேல் பின்னுக்குத் தள்ளப்படும் என்பதற்கு த.வெ.க. அமைச்சர்கள் பதவியேற்பு விழாவே சான்று. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தொடர் அவமதிப்பும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டதை தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரி வித்துக் கொள்வதுடன், தமிழோடு விளையாடியவர்கள் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

இவ்வாறு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *