கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.5.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஜோதிடர் ரிக்கி ராதன் நியமனத்தை திரும்பப் பெற்ற தமிழ்நாடு அரசு: “திமுக, அதன் கூட்டணி கட்சிகளின் அழுத்தங்களுக்கு இடம் கொடுத்து, விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

* ‘2006இல் அமைந்த தி.மு.க. ஆட்சி, உங்களைப் போல எதிர்த்தரப்பு எம்எல்ஏ-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்தில் விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, ஷோஃபா செட் அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி இல்லை’ என முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்:  ரூ.15 லட்சத்திற்கு மகாராட்டிரா நாசிக்  நகரைச் சேர்ந்தவரால் விற்கப்பட்ட வினாத்தாள் மாதிரி. டில்லி அருகே உள்ள குருகிராம் மருத்துவரும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக தலைவர்களின் ஒரு பிரிவு விஜய்யின் தவெக கட்சிக்கு வாக்களித்ததைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை அன்று எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரை அவர்களது கட்சி பதவிகளில் இருந்து  அதிரடி நீக்கம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நீட் யுஜி வினாத்தாள் கசிவு பாஜ இளைஞரணி நிர்வாகி, சகோதரனுடன் கைது: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ராஜஸ்தானின் பாஜக இளைஞரணிச் செயலாளர் தினேஷ் பின்வால் அவரது சகோதரர் மன்கிலால் பின்வால் உட்பட 5 பேரை சிபிஅய் கைது செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கண்டனம்.

தி இந்து:

* இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே மோடி அரசும், தேசிய தேர்வு முகமையும், நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றத்தில் வாதம் செய்தது. அப்போது கொடுத்த வாக்குறுதியும், சட்டமும் தற்போது காற்றில் விடப்பட்டு, நீட் யுஜி தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமர்சனம்.

தி டெலிகிராப்:

* பொது வெளியில் ஜாதி நிந்தனைகள் செய்யப்பட்டால் மட்டுமே பட்டியல் ஜாதியினர்/பழங்குடியினர் சட்டம் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் கூறியது. வீட்டிற்குள் தாழ்த்தப்பட்ட ஒருவரை திட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் மீதான முதல் தகவல் அறிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது; சம்பவம் நடந்தபோது பொதுப் பார்வை இல்லை என்று கூறியது.

* தவெக ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக புறக்கணிப்பு – ஊழல் சக்திகளுடன் தவெக அரசு சதி செய்வதாக குற்றம் சாட்டினார்; மக்கள் அந்த அரசின் மீது நம்பிக்கையை இழந்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், விஜய் அவர்களை நோக்கி, “மாநிலத்தை இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’ (REELS) வாயிலாக அல்லாமல், நிஜமாகவே ஆட்சி செய்யுங்கள்” என்று அவர் கேட்டுக்கொண்டார். திராவிட மாதிரித் திட்டங்களைத் தொடருமாறு முதலமைச்சரிடம் வலியுறுத்தல்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* அரசமைப்பு சட்ட சரத்து 26-இல் இடம்பெற்றுள்ள ‘சமயப் பிரிவு’ (DENOMINATION) என்பதன் உண்மையான பொருளை ஆராயும்போதும், தனிநபரின் சமயச் சுதந்திரத்திற்கும் சமயப் பிரிவுகளின் மத உரிமைகளுக்கும் இடையே உள்ள வெளிப்படையான முரண்பாட்டை தீர்க்கும் போதும், உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பின் ஆங்கில வடிவத்தையா அல்லது இந்தி வடிவத்தையா சார்ந்திருக்க வேண்டும்? அரசியலமைப்புச் சபை அரசியலமைப்பை ஆங்கிலத்தில்தான் ஏற்றுக்கொண்டது, இந்தியில் அல்ல: கேரள அரசு சார்பில் வாதம்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *