தந்தை பெரியார் ஓர் ஒப்பற்ற சுய சிந்தனையாளர். அவர் சிறுவயதிலிருந்தே சிந்தித்த கருத்துகளைச் சுய பரிசோதனை செய்து தன் வாழ்நாளில் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து சூழ்ச்சிகளைப் புரிந்து அதனை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு எடுத்துக் கூறினார்.
இயக்கம் கண்டார் – வெற்றியும் கண்டார்.
காலம் காலமாக அடிமைப்பட்டு வாழ்ந்த மக்களுக்கு அறிவு உணர்ச்சி, தன்மான உணர்ச்சியை மூட்டினார்.
தமிழர்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்.
அவர் எடுத்த பிரச்சினைகள் அனைத்தும் சட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டன.
அவரின் இயக்கத்தின் அடிப்படையான வழிமுறைகளான பிரச்சாரம் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடத்தி இன்று வரை இயக்கம் மிகுந்த வலிமையோடு செயல்பட்டு வருகிறது.
தந்தை பெரியார் தொடங்கி வைத்த அந்தச்சுடர் அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் இன்றும் ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்கிறது.
இயக்கத்தின் நாளைய தலைமுறையின் நம்பிக்கையாகத் திகழக்கூடிய மாணவச் செல்வங்களுக்கு அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு சிந்தனை, சமூகநீதி, சமத்துவம், பாலின வேறுபாடு உள்ளவர்களை உள்ளடக்கி திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியாக பெரியார் பயிற்சிப் பட்டறை நடத்தி வருகிறார்கள்.
மாணவர்களுக்கு கருத்து வலிமையோடு, மன வலிமையுடன் தேவை என்பதையும் இயற்கை சார்ந்த இடங்களை தேர்வு செய்து மன மகிழ்ச்சியை உண்டாக்கக்கூடிய வகையில் குற்றாலம் ஒகேனக்கல் சுருளி போன்ற அருவிகள் கொட்டும் இடங்களில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள்.
முதல் கட்டமாக…
அதுபோலவே முக்கிய நகரங்களில் சனி ஞாயிறு கிழமைகளில் இரண்டு நாள் அல்லது தேவைக்கு ஏற்ப ஒரு நாள் பயிற்சிப் பட்டறை என 58 கழக மாவட்டங்களில் முதற்கட்டமாக நடத்தப்பட்டுள்ளது.
17.05.2026 அன்று திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மிகுந்த சிறப்போடு நடைபெற்றது.
பயிற்சிப் பட்டறையில் 53 இருபால் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதில் 31 பெண்களும், 22 ஆண்களும் கலந்து கொண்டனர். பார்வையாளர்கள் அடங்கி 80 பேர் இருந்தனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய வகுப்புகள் மாலை 6 மணி வரை 8 வகுப்புகள் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 17.05.2026 ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் புறவழிச் சாலை ரோட்டரி சங்க அரங்கத்தில் எழுச்சியோடு தொடங்கியது.
திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி தலைமை ஏற்று உரையாற்றினார்.
மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் வீ.மோகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஈவேரா, திருவாரூர் ஒன்றியத் தலைவர் க.கவுதமன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் க.வீரையன் மாவட்ட தொழிலாளர் அணிச் செயலாளர் இரா.நேரு ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளைஞரணித் தலைவர் கோ.பிளாட்டோ, அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி தொடக்க உரையாற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், பயிற்சிப் பட்டறையை நெறிப்படுத்தியும், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை எடுத்துக் கூறியும் நோக்க உரையாற்றினார். தொடர்ந்து வகுப்புகளை நெறிப்படுத்தினார்.
தொடர்ந்து தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு எனும் தலைப்பில் மா.அழகிரிசாமி முதல் வகுப்பினை தொடங்கினார்.
பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு மற்றும் ஜாதி ஒழிப்புப் போரில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் கவிஞர் கலி. பூங்குன்றன், ஹிந்து ஹிந்துத்துவா சங்பரிவார்-ஆர்.எஸ்.எஸ். மற்றும் தந்தை பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் என்ற தலைப்பில் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், புராண இதிகாச புரட்டுகள் என்ற தலைப்பில் முனைவர் துரை. சந்திரசேகரன், சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் பேராசிரியர் நம்.சீனிவாசன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் என்ற தலைப்பில் வி.சி.வில்வம் ஆகியோர் பயிற்சி வகுப்பினை குறித்த நேரத்தில் எடுத்து நிறைவு செய்தனர்.
எந்த விதமான கவனச் சிதறல்களும் இல்லாமல் மாணவர்கள் சிறப்பாகக் கவனித்தனர்.
அதிகம் பெண் பிள்ளைகள் என்பதால் அனைவரும் வகுப்பில் குறிப்பெடுத்து சிறப்பாக இறுதியில் உரையாற்றினார்கள்.
ரோட்டரி சங்கத்தின் அரங்கம் சிறிதாக இருந்தாலும் கச்சிதமாக அமைந்தது.
திருவாரூர் மாவட்ட கழகத் தோழர்கள் உழைப்பால் பயிற்சிப் பட்டறை நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறியது.
கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் பயிற்சிப் பட்டறையை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
மாணவர்களின் கருத்துரை
ஒரு நாள் முழுவதும் பல்வேறு தளங்களில் இருந்து வந்தவர்களுக்கு பயிற்சிப் பட்டறை பயனுள்ளதாக இருந்தது.
தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தெளிவாக இனிவரும் காலங்களில் இருப்போம்.
நமது இல்ல நிகழ்ச்சிகளில் தமிழர்களை அழைத்து நடத்த வேண்டும் என்ற ஒரு சிந்தனை எங்களுக்கு உருவானது.
தந்தை பெரியாரை தொடர்ந்து படிப்போம் நேசிப்போம்.
இது போன்ற வகுப்புகளில் நிச்சயம் பங்கேற்போம் வருங்காலங்களிலும்…
நடைமுறை வாழ்க்கையில் ஏதோ என்று வாழ்கிறோம் என்று நினைத்தோம்…
ஒவ்வொன்றுக்கும் பின் புலத்தில் ஒரு வரலாறு இருப்பதையும் அறிந்து கொண்டோம்.
இது போன்ற வகுப்புகளில் நாங்களும் தொடர்ந்து பயிற்சி எடுத்து மிகப்பெரிய அளவில் பேச்சாளர்களாக வருவோம் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து அமர வைத்து பேசினால் நிச்சயமாக சிந்திப்பார்கள் என்பதை இது போன்ற பயிற்சி வகுப்புகள் நன்கு வெளிக்காட்டுகிறது.
சிறப்பாக குறிப்பு எடுத்த 6 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கழகப் பொறுப்பாளர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.
சிறப்பாக ஏற்பாடு செய்த கழகப் பொறுப்பாளர்கள் மற்றும்பங்கேற்ற மாணவர்களை பாராட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் உரையாற்றினார்.
இறுதியாக கழகப் பொறுப்பாளர்களும் பங்கேற்ற மாணவர்களும் குழுப் படம் எடுத்துக் கொண்டனர்.
மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.
பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் தாராசுரம் இளங்கோவன் புத்தகங்கள் வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்வில் பெரியார் பெருந்தொண்டர் க.முனியாண்டி, நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஷ் குப்தா. கழக பேச்சாளர் இராம. அன்பழகன், தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் இரா. வீரக்குமார், மாவட்டத் துணைத் தலைவர்
பா. நரேந்திரன், திருமருகல் ஒன்றியத் தலைவர் இராச. முருகையன், நாகை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மு.குட்டிமணி, நாகை நகரச் செயலாளர் சண்.ரவிக்குமார், திருவாரூர் கோ.ராமலிங்கம். குடவாசல் ஒன்றிய துணைத் தலைவர் சி.அம்பேத்கர். நன்னிலம் ஒன்றிய தலைவர் இரா.தன்ராஜ். நன்னிலம் ப.க.தலைவர் சு.கரிகாலன், திருவாரூர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் இரவிக்குமார் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அறிவழகன் மாவட்ட மாணவர் கழக செயலாளர் அறிவுச்சுடர், கு.சிவானந்தம். குடந்தை மாவட்ட காப்பாளர் வை.இளங்கோவன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொகுப்பு : கலைமணி
