கொலம்போ, மே 17 மாலத்தீவில் உள்ள வாவூ அட்டோல் (Vaavu Atoll) பகுதியில், சுமார் 50 மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் குகை ஒன்றை ஆய்வு செய்யும் பணியில் 5 இத்தாலிய (ஆழ் கடல் நீச்சல் வீரர்கள்) கொண்ட குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக குகைக்குள் சிக்கிக் கொண்டனர். குகையிலிருந்து வெளியேற முயற்சிப்பதற்கு முன்பாகவே, அவர்கள் வைத்திருந்த ஆக்ஸிஜன் உருளைகள் தீர்ந்ததால் மூச்சுத் திணறி அய்ந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந் நிலையில், இந்த ஆபத்தான மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாலத்தீவு ராணுவ டைவர் முகமது மஹூதி என்பவரும் எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
