சென்னை, மே 17- சென்னை புது வண்ணைப் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்து வந்த இளைஞரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர் தவெக ஆதரவாளர் என்பது தெரியவந்தது.
கைது நடவடிக்கையின் போது அந்த இளைஞர் காவல் துறையினரிடம், ”கஞ்சா வளர்த்தால் என்ன தப்பு? நான் சாமி கும்பிடத்தான் இதை வளர்த்து வருகிறேன்” என்று எதார்த்தமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டவிரோத செயலை நியாயப்படுத்தி, அவர் எழுப்பிய இந்த விசித்திரமான கேள்வியைக் கேட்டு சம்பவ இடத்தில் இருந்த காவல் துறையினர் செய்வதறியாது சில நொடிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
