தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்குரைஞராக விஜய நாராயண் நியமனம்

சென்னை, மே 15- தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்குரைஞராக மூத்த வழக்குரைஞர் விஜய் நாராயணை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. அதை தொடர்ந்து ஏற்ெகனவே அரசின் தலைமை வழக்குரைஞராக இருந்த பி.எஸ். ராமன் பதவி விலகியதைத் தொடர்ந்து 13.5.2026 அன்று தமிழக அரசின் புதிய தலைமை வழக்குரைஞராக விஜய நாராயண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விஜய் நாராயண் ஏற்ெகனவே 2017-2021 வரை தமிழ்நாடு தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் முன்னாள் இந்திய அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலின் உறவினர் ஆவார்.

அவதூறு வழக்கு

காங்கிரஸ் தலைவர் பவன் கேரா ஆஜர்!

கவுகாத்தி, மே 15- அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரிங்கி சர்மா தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா 13.5.2026 அன்று அசாம் காவல்துறையினரின் முன் விசாரணைக்காக ஆஜரானார்.

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரிங்கி சர்மாவுக்கு முறைகேடாகச் சேர்த்த சொத்துகள் இருப்பதாகவும், அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கடந்த காலங்களில் குற்றம்சாட்டியிருந்தார். தன் மீதான இந்த ஆதாரமற்ற புகார்கள் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி, ரிங்கி சர்மா அசாம் காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் பவன் கேரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னதாக பவன் கேரா தாக்கல் செய்த முன்பிணை மனுவைக் கவுகாத்தி நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவருக்கு நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 13.5.2026 அன்று கவுகாத்தியில் உள்ள அசாம் காவல்துறையின் குற்றப்பிரிவு அலுவலகத்தில் பவன் கேரா நேரில் ஆஜரானார். அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது.

விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பவன் கேரா கூறியதாவது: “காவல்துறையினர் எனக்கு அனுப்பிய அழைப்பாணையை ஏற்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளேன். விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். நாங்கள் சட்டத்தையும், இந்திய நீதித்துறையையும் மதிக்கிறோம். எனவே, சட்ட நடைமுறைகளின்படி உரிய விளக்கங்களை அளித்துள்ளேன்” என்றார். இந்த விவகாரம் அசாம் மற்றும் தேசிய அளவிலான அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *