டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாட்டின் மூத்த வழக்குரைஞர் மோகனா உட்பட உச்ச நீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகள் நியமனம்: மொத்த எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது.
* வந்தேமாதரம் முழுப் பாடலை பாட வேண்டிய அவசியம் இல்லை; இந்த நடைமுறை அவசியமற்றது, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நீட் குளறுபடிகளுக்கு காரணமான தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும், மருத்துவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.
* மேற்கு வங்கத்தில் 177 தொகுதிகளில் பாஜக வாக்கு மோசடியில் ஈடுபட்டது, மம்தா குற்றச்சாட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாலியல் வன்கொடுமை குற்றவாளி சாமியார் ஆசாராம் பாபுவின் பிணை ரத்து; உடல்நிலையைக் காரணம் காட்டி அவசர கால சிறை விடுப்பு (பரோல்) மற்றும் இடைக்கால பிணை மூலம் குறைந்தது 15 முறையாவது நீதிமன்ற நிவாரணத்தைப் பெற முயன்றுள்ளார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், ஒரு சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது,
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நீட்-யுஜி மறுதேர்வுக்கு பிரதமரே பொறுப்பு, தகவல் கசிந்தால் பதவி விலக வேண்டும் என திக்விஜய் சிங் பேச்சு. சொலிசிட்டர் ஜெனரலின் நீதிமன்றக் கருத்துகளை மேற்கோள் காட்டி, ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் நீட்-யுஜி மறுதேர்வை பிரதமர் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு வருவதாக காங்கிரஸ் தலைவர் கூறுகிறார்.
தி இந்து:
* கணினி வழி நீட் மறுதேர்வு கோரிய மனுக்கள் தள்ளுபடி: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு. நீட்-யுஜி, 2026 மறுதேர்வை தற்போது உள்ள பேனா-காகித முறைக்கு பதிலாக கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் நடத்துமாறு தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடக் கோரிய மனு நிராகரிப்பு.
– குடந்தை கருணா
