கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 10.4.2026

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நாடாளுமன்ற அடிப்படை கட்டமைப்புகளை மோடி அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது தொகுதி மறுவரையறைக்கு ஏன் அவசரம்? தென் மாநிலங்களின் குரலை ஒடுக்க பாஜக அரசு  நினைக்கிறதா? பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.

* பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்பு. டில்லி வருகை.

* கோவில்களில் மக்களை பல்வேறு பிரிவினருக்கும், பெண்களுக்கும் அனுமதி மறுத்தால் ஹிந்து மதம் பாதிப்புக்குள்ளாகும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்புத் திருத்தம் காரணமாக மேற்கு வங்கத்தில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது, தேர்தல் முறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது என்கிறது தலையங்கம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆறாம் வகுப்பில் மூன்றாவது மொழி கட்டாயம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அவசர உத்தரவு: இந்த உத்தரவை “அவசரமானது மற்றும் கட்டாயமானது” என்று குறிப்பிட்ட சி.பி.எஸ்.இ, அனைத்துப் பள்ளிகளும் ஒரு வாரத்திற்குள் மும்மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.

* ‘தீபத்தூண்’ (DEEPATHOON) விவகாரத்தில், தனி நீதிபதி பிறப்பித்த பல உத்தரவுகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. நீதிமன்றங்கள் அரசியல் மேடைகளாக மாறிவிடக் கூடாது என்று குறிப்பிட்ட மதுரை அமர்வு, இந்த விவகாரத்தில் பிறப்பித்த இடைக்காலத் தடையை நீட்டித்ததுடன், சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த விவகாரத்தை மேலும் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது.

தி இந்து:

* ‘சுதந்திரவீர்’ பட்டம் சாவர்க்கருக்கு எந்த அரசாலும் வழங்கப்படவில்லை: அவரது பேரன்-உறவினர் தகவல்: மாறாக, எழுத்தாளர் சதாசிவ ரானடே என்பவர் எழுதிய ஒரு வாழ்க்கை வரலாற்று நூலில் தான் அப்பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது என்று, அந்த அரசியல் சித்தாந்தவாதியின் பேரன்-உறவினரான சத்யகி சாவர்க்கர், புனேயில் உள்ள எம்பி/எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

* மகளிர் இட ஒதுக்கீடு மசோதா காங். செயற்குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, எல்லை நிர்ணய நடவடிக்கை மற்றும் மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி விவாதிக்க உள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது.

* ஏஜேயுபி (AJUP) தலைவர் பாஜக-விடம் இருந்து பணம் பெற்றார்: திரிணாமுல் குற்றச்சாட்டு. மேற்கு வங்கத்தில் உள்ள முஸ்லிம்களை “திட்டமிட்டு திசைதிருப்பும்” நோக்கத்துடன், ‘ஆம் ஜனதா உன்னயன் கட்சி’யின் (AJUP) தலைவர் ஹுமாயூன் கபீர், பாரதிய ஜனதா கட்சி இடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 9.4.2026 அன்று குற்றம் சாட்டியது.

* எனது இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழ்நாட்டுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன்: நான் கொண்டு வந்த திட்டங்களை மண்ணுக்குள் புதைக்கும் துணிச்சல் யாருக்கும் வராது. திமுக திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டை ஸ்டாலின் தான் ஆளுவார். என்னை மண்ணுக்குள் புதைத்தாலும் எனது திட்டங்களை புதைக்க முடியாது என தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு.

தி டெலிகிராப்:

* பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்: “மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இத்த கைய தொலைநோக்கு விளைவுகளைக் கொண்ட ஒரு முடிவை ஏன் திணிக்க வேண்டும்? 2024 நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாகப் பெண் வாக்காளர்களை கவரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய முயற்சிகளைப் போலவே, இதுவும் தேர்தல் களத்தின் பேசுபொருளை தங்களுக்கு சாதகமாக வடிவமைக்கும் நோக்கத்திலான மற்றொரு அரசியல் தந்திரமாகவே தோன்றுகிறது.” என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *