சென்னை, மே 14 நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாக, அத்தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) ரத்து செய்துள்ளதோடு, வழக்கை சிபிஅய் விசாரணைக்கு மாற்றியுள்ளது.
இது தொடர்பாக முதல மைச்சர் ஜோசப் விஜய் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:
‘நீட்’ தேர்வு
2024-ஆம் ஆண்டைத் தொடர்ந்து தற்போதும் வினாத் தாள் கசிந்து நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகும் இத்தகைய குளறுபடிகள் நடப்பது, தேசிய அளவிலான தேர் வின் கட்டமைப்புத் தோல்வியைக் காட்டுகிறது.
இந்த ரத்து நடவடிக்கை நாடு முழுவதுமுள்ள 22 லட்சம் மாணவர்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளது. குறிப்பாக, நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.
நீட் தேர்வை தமிழ்நாடு அரசு ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகிறது. தற்போதைய சூழல், இந்தத் தேர்வு தேவையில்லை என்பதற்கான உறுதியான சான்றாகும்.
ரத்து செய்ய வேண்டும்
நீட் தேர்வை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மருத்துவப் படிப்பு களுக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்களை, 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படை யிலேயே மாநில அரசுகள் நிரப்ப அனுமதிக்க வேண்டும்’’
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
