‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம்: நாசிக்கைச் சேர்ந்த இளைஞர் கைது – சிபிஅய் அதிரடி விசாரணை

சென்னை, மே 13 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மகாராட்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த ஷுபம் கைர்னர் என்ற இளைஞரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் வழங்கிய ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே,  (உத்தேச வினாத்தாள்) என்ற பெயரில் சமூக வலைதளங்கள் மற்றும் இதர வழிகளில் வினாத்தாளை கசியவிட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இவருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், தற்போது மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் மற்றும் இதர மாநிலத் தொடர்புகள் குறித்தும் சிபிஅய் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *