சென்னை, மே 13 – ‘‘பெரும் ஆளு மைகளால் பெருமை பெற்ற பொறுப்பு; பேரவையின் மாண்புகளையும் மரபுகளையும் காத்திடுவீர்’’ என்று சட்டப்பேரவை தலைவர், துணைத் தலைவர் ஆகியோரைப் பாராட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளப் பதிவில் பதி விட்டுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு வருமாறு :–
தமிழ்நாடு சட்டமன்றப் பேர வைத் தலைவராகத் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ள ஜே.சி.டி.பிர பாகர் அவர்களுக்கும், பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ள ரவிசங்கர் அவர்க ளுக்கும் எனது வாழ்த்துகள்.
மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மர பினையும், பேரவையின் மாண்பு களையும் காத்திட வேண்டும்.
ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்ட மன்றத்தில் மற்ற கட்சி உறுப்பி னர்களின் எண்ணிக்கைதான் அதி கம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு!
அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகை யில் பதவிகளுக்குத் தேர்ந்தெ டுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதி விட்டுள்ளார்.
மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பு பேரவையின் மாண்புகளையும் மரபுகளையும் காத்திடுவீர்! சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவரைப் பாராட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு!
Leave a Comment
