கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழா

பெங்களூரு, மே 13- பெங்களுரு குயின்ஸ் சாலை ப.சு.மணி நூலக அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் சார்பில் 5.5.2026 அன்று மாலை 5 மணிக்கு நூலக அரங்கில் புரட்சிப் பாவலர் பாரதிதாசனின் பிறந்த நாள் விழா மாநிலத் தலைவர் சே.குணவேந்தன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தோழர் சங்கர்தாஸ் அனைவரை யும் வரவேற்று, நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார். கழக காப்பாளர் மு.சானகிராமன், செயலாளர் இரா.முல்லைக்கோ முன்னிலை வகித்து உரை நிகழ்த் தினர்.

ஆசிரியர் அருள் இசபெல்லா புரட்சிக்கவிஞரின் எழுச்சிப் பாடலை பாடினார்.

புலவர் கார்த்தியாயினி,
ஆர்.வீ.மதியழகன், அன்னம்மா உரை நிகர்த்தினர். மாநிலத் தலைவர் கருத்துரை வழங்கினார்.

கவிஞர் இராசேந்திரபாபு, புரட்சிக்கவிஞரைப் பற்றியும், அவரது பாடல் சிறப்புகள் பற்றியும் சிறப்புரை வழங் கினார். அனைவருக்கும் கருநாடக மாநிலத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் அமைப்பின் தலைவர் முத்துமணி நன்னன் பயனாடைகள் அணிவித்து சிறப்பு செய்து நன்றியுரையாற்றினார். அரங்கில் புரட்சிகவிஞரின் ஒளிப் படங்கள் நிறைந்த பதாகை அலங்கரிக்கப்பட்டிருந்தது. புரட்சிக் கவிஞரின் தமிழ் திருநாள் விழா ஒரு வாரம் முழுவதும் நடைபெற்று நிறை வடைந்தது.

அரங்கில் பேராசிரியர் வணங்காமுடி மறைந்த ஓராண்டு நினைவை போற்றும் வகையில் ஒரு மணித் துளி அமைதி காத்தனர். அவரது மறைவினை குறித்தும் அவரது இயக்கப் பணி, கல்விப் பணி, பொதுப் பணிகள் குறித்தும் இரா.முல்லைக்கோ, மு.சானகிராமன், புலவர் கார்த்தியாயினி நினைவேந்தல் உரை நிகழ்த்திய பின் தங்கவயல் பேராசிரியர் கிருட்டினகுமார் நெடிய நேரம் வணங்காமுடி அய்யாவின் புகழ் நலங்களைப் பற்றி விளக்கமாகப் பேசிய பின்னர் சங்கர்தாஸ் ஏற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியினை நிறைவு செய்தார். அனைவருக்கும் கருநாடக மாநிலத் திராவிடர் கழக தலைவர் சே.குணவேந்தன் தேநீர் மற்றும சிற்றுணவு ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வில் கழகத் தோழர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *