தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட திரு. பெரியகருப்பன், தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற இறுதித் தீர்ப்பு வரும்வரை, த.வெ.க. வேட்பாளர் சட்டமன்றத்தில் எந்த நிகழ்விலும் வாக்களிக்கத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
