தவெக அரசு பதவியேற்றது – தமிழ்நாட்டின் 14-ஆவது முதலமைச்சரானார் சி.ஜோசப் விஜய் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தில் முதல் கையெழுத்து

1 Min Read

“தவெக ஆட்சியில்
‘இவர்கள்’ கையில் தான் கல்வித்துறை இருக்க வேண்டும்”

– ஆளூர் ஷா நவாஸ்

தவெக ஆட்சியில் அமையப் போகும் கல்வித் துறை குறித்து ஆளூர் ஷா நவாஸ் நேற்று (10.5.2026) வெளியிட்ட பதிவு

ஆளூர் ஷா நவாஸ் பதிவு: கடந்த திமுக ஆட்சியில்  கோவி செழியன்,  அன்பில் மகேஸ் ஆகியோரிடம் கல்வித்துறை இருந்தது. கல்வி மறுக்கப்பட்ட சமூகப் பின்னணியில் இருந்து சமூகநீதி அடிப்படையில் மேலெழுந்து வந்தவர்களின் கைகளில் அத்துறை இருப்பதே நன்று. தவெக அமைச்சரவையிலும் அந்நிலை தொடர வேண்டும்.

தமிழ்நாட்டின் கல்வி வரலாறும் அரசியல் வரலாறும் வேறு வேறல்ல. கல்வியே நம் அரசியல். கல்விக்காகவே நம் அரசியல்”. என்றிருக்கிறார்.

வரதட்சணை கொலையில் டில்லி முதலிடம்

 சென்னைக்கு 11ஆவது இடம்

வரதட்சணைக் கொலைகள் அதிகம் நிகழும் பெருநகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் டில்லி உள்ளது. 2024-ஆம் ஆண்டு டில்லியில் 111 பெண்கள் வரதட்சணைக் கொடுமைக்கு பலியாகி உள்ளனர். இந்த பட்டியலில் டில்லி தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2021-ஆம் ஆண்டு டில்லியில் 139 பெண்கள் இறந்ததும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த வரிசையில் 11-ஆவது இடத்தில் சென்னை இருக்கிறது. சென்னையில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் மே 16 வரை கனமழைக்கு வாய்ப்பு

வானிலை மய்யம்

தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் மே மாதம் 16-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *