கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.5.2026

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்கு கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும் தான் வேணும். வாக்களித்த மக்களை ஏமாற்றி திசைதிருப்பாதீங்க”: முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி.

* சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல மைச்சராக விஜய் பதவியேற்பு: 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்

* திமுக சட்டப்பேரவை கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் முதலில் பாடப்பட்ட வந்தே மாதரம் – சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது. அதேபோல் நிகழ்ச்சியின் தொடக்கம், நிறைவு என இரு முறை வந்தே மாதரம் பாடப்பட்டது. அனைத்துக் கட்சித் தலைவர்கள் கண்டனம்.

தி இந்து:

* ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர்கள் கரோனா காலக் கட்டத்தை போல வீட்டிலிருந்தே பணியாற்றுங்கள்: பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள். (அப்ப டீசல், பெட்ரோல் விலை உயர்வு உறுதி)

தி டெலிகிராப்:

* வாக்காளர் பட்டியலைத் தீர்மானிப்பது நடைமுறையில் பாஜகவே: ‘ஒரு சார்புடைய அமைப்பாக’ தேர்தல் ஆணையம் மாறி விட்டது. வாக்காளர் பட்டிய லிலிருந்து சிறுபான்மையினர் மற்றும் நலிந்த பிரிவினரை “தேர்ந்தெடுத்து விலக்குவதற்காகவே” அந்த ஆணையம் ‘SIR’ நடைமுறையைப் பயன் படுத்துவதாகவும் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டு.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *