தமிழ்நாடு அரசின் புதிய முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டுகிறோம்!

2 Min Read

முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் – பண்பாட்டுப் படையெடுப்பின் தொடக்கமா?

முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் – பண்பாட்டுப் படையெடுப்பின் தொடக்கமா? என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

மாண்புமிகு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களது பதவியேற்பு விழாவில், இதற்கு முன் எப்போதும் நடந்திராத ‘‘திடீர் மாற்றம்’’ – விழாவின் தொடக்கத்திலேயே நடைபெற்றதோடு, விழா முடிவிலும் அதைக் காண முடிந்தது. தமிழ்நாட்டின்மீது மீண்டும் ஹிந்தி, சமஸ்கிருத, ஆர்.எஸ்.எஸ். கொள்கைப் பண்பாட்டின் ஆதிக்கம் தொடங்கி உள்ளது.

நமது கண்டனத்தைப் பதிவு

செய்யவேண்டிய அவசியம்!

தமிழ்நாட்டின் புதிய அரசுக்கு, குறிப்பாக முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கு சுட்டிக்காட்டி (அதுவும் பதவியேற்ற அன்றே) நமது கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

‘வந்தே மாதரம்’ பாடல் சமஸ்கிருத, ஹிந்தி மொழிப் படையெடுப்பின் படையெடுப்பு ஆகும். (சமஸ்கிருத மயப்படுத்தப்பட்ட பாட்டு)

அதைவிட, ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு வதைப்போல’, நம் மொழி செம்மொழித் தமிழ் வாழ்த்தாம் ‘‘நீராரும் கடலுடுத்த’’ பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைப் பார்த்து, தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சம் கொதிக்கிறது

இதுபோன்ற அவலங்கள்
மீண்டும் தொடராது இருக்க
வழிவகை காணவேண்டும்!

‘‘மரபுகள் மாற்றப்பட்டதுதானா இவர்களால் சொல்லப்பட்ட மாற்றம்?’’ என்ற கேள்வி, தமிழ்நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இது எப்படி? ஏன்? ஏற்பட்டது என்பதை முதலமைச்சர் ஓர் அவசர விசாரணை நடத்தி, அதுபோன்ற அவலங்கள் மீண்டும் தொடராது இருக்க வழிவகை காணவேண்டும்!

கவனச்சிதறல் இன்றி செயல்படவேண்டும்!

விழா ஏற்பாட்டாளர்கள் யார்? ‘லோக் பவன்’ என்ற ஆளுநர் மாளிகையா? அல்லது தமிழ்நாடு அரசின் பொதுத் துறையா? (Public Department?) என்பதை விசாரித்து, நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிரான இத்தகைய பண்பாட்டு, படையெடுப்பு மீண்டும் அரசு நிகழ்ச்சிகளில் ஏற்படாது – கவனச்சிதறல் இன்றி செயல்படவேண்டும்.

 கி.வீரமணி

    தலைவர்,

  திராவிடர் கழகம்

 

 

சென்னை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *