மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் 31 தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தை விட நீக்கப்பட்ட வாக்காளர்கள் அதிகம்! புதிதாக வழக்குத் தொடர உச்சநீதிமன்றம் அறிவுரை

புதுடில்லி, மே.12- மேற்கு வங்காள சட்டமன்றத் தேர் தலில், 31 தொகுதிகளில், வெற்றி வித்தியாசத்தை விட நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக திரிணாமூல் காங் கிரஸ் கூறியதால், புதிதாக வழக்கு தொடருமாறு உச்சநீதி மன்றம் தெரிவித்தது.

தீர்ப்பாயங்கள்

மேற்கு வங்காளத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் லட்சக்கணக்கான வாக்கா ளர்கள் பெயர்கள் நீக்கப் பட்டன. சுமார் 60 லட்சம் வாக்காளர்கள், ஆட்சேபனை தெரிவித்தனர். அவர்களது மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுமார் 700 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். பின்னர், 19 நீதிபதிகள் தலை மையில் 19 தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன. இதற்கி டையே, மேற்கு வங்காள சட்ட மன்றத் தேர்தல் முடிவடைந்து அங்கு பா.ஜனதா கட்சி ஆட்சி அமைந்துள்ளது.

31 தொகுதிகள் நிலவரம்

இந்நிலையில், உயர்நீதிமன் றத்தில் மம்தா உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுக்கள் நேற்று (11.5.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தன. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான கல்யாண் ஆஜரானார்.

அவர் வாதிடுகையில், “ஏதேனும் ஒரு தொகுதியில், வெற்றி வித்தியாசத்தை விட, அங்கு நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அதை உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என்று நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஏற்ெகனவே கூறியிருந்தார்.

அண்மையில் நடந்த மேற்கு வங்காள தேர்தலில் ஒரு தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளர் 862 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனால் அங்கு 5 ஆயிரத்து 550 வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தனர். இது போல், 31 தொகுதிகளில், வெற்றி வித்தியாசத்தை விட நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது” என்று கூறினார்.

தனி மனுவாக தாக்கல் செய்யுங்கள்

அதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் டி.எஸ்.நாயுடு, “வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான பிரச் சினைகளுக்கு மட்டுமே தேர்தல் ஆணையம்பொறுப்பேற்க முடியும். தேர்தலுக்கு பிந்தைய பிரச்சினைக்கு தேர்தல் மனுதான் தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

அதற்கு நீதிபதி ஜோய் மால்யா பக்சி, “தேர்தல் முடிவுகள் பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சொல்வதை எல்லாம் தனியாக இடைக்கால மனுவாக தாக்கல் செய்யலாம். தேர்தல் ஆணையம் சொல்ல வேண்டியதை பதில் மனுவாக தாக்கல் செய்யட்டும்” என்று கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *