மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் ‘நீட்’ தேர்வு எழுதிய முதியவர்

1 Min Read

லக்னோ, மே 10- உத்தரபிரதேசம் லக்னோவை சேர்ந்தவர் அசோக் பாஹர் (வயது71). உத்தரகாண்டில் உள்ள இந்திய மருந்துகள் நிறுவனத்தில்
(அய்.டி.பி.எல்.) மார்க்கெட்டிங் பிரிவு தலைவராகவும், வெளியுறவுத் துறையில் ஆலோசகராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

இவரது மனைவி மருத்துவர் மஞ்சு பாஹர். மகப்பேறு மருத்துவர் அசோக் பாஹரின் தந்தையும் லக்னோவில் பிரபல மருத்துவராக இருந்தவர். அதனால் இவரும் மருத்துவராக வேண்டும் என இவரது தாய் விரும்பி உள்ளார்.

ஆனால் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுகளில் இவரால் வெற்றி பெற முடியவில்லை. இவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் சுமார் 20 பேர் மருத்துவர்களாக உள்ளனர். பலர் வெளிநாடுகளில் பணியாற்று கின்றனர்.

அதனால் தனது மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழுதி உள்ளார் அசோக் பாஹர். இவர் மருத்துவராகி ஹெபடாலஜி படிப்பை முடித்து கல்லீரல் நோய் நிபுணராக வேண்டும் என விரும்புகிறார். 71 வயதில் இவர் நீட் தேர்வு எழுதும் செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

பலர் இவரது முயற்சியை ஊக்குவித்தாலும், சிலர் இந்த வயதில் மருத்துவம் படிப்பது வீண், காலம் கடந்த செயல் என்றும் மற்றொருவரின் மருத்துவர் சீட் வாய்ப்பை கெடுப்பது போன்றது எனவும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *