ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

கேள்வி: மேற்கு வங்கத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, “முதலமைச்சர் பதவியில் இருந்து நான் விலகமாட்டேன்” என்று மம்தா உறுதியாகத் தெரிவித்துள்ளாரே – அடுத்து என்ன நடக்கும்?

– எம்.கதிர், நம்மாழ்வார்பேட்டை, சென்னை

பதில்: போராட்டம் அவரது ரத்த ஓட்டம்! எனவேதான் துணிவின் உச்சியில் என்றும் அவர்!

கேள்வி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தாம் தாக்கிப் பேசிய கட்சியினரிடமும், எதிர்கட்சிக் கூட்டணி யினரிடமும் ஆட்சியமைக்க ஆதரவுக்குத் த.வெ.க.வினரின் முயற்சி கண்டு தங்களுக்குத் தோன்றுவது என்ன?

– இரா.சுந்தர், திருவானைக்காவல்

பதில்: கொள்கை முக்கியமல்ல; பதவிதான் முக்கியம்! சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் என்பதன் பகிரங்க நடைமுறை – புரிகிறதா?

கேள்வி: பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் ஹரியாவ் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மணமகள் பூஜா மேக்வால் குதிரையில் ஊர்வலமாகச் சென்றார் என்பதற்காக அவர், அவரது உறவினர்கள் மீது உயர்ஜாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்களே – இத்தகைய கொடூரங்களுக்கு முடிவே இல்லையா?

– எஸ்.ஜெயக்குமார், காஞ்சிபுரம்

பதில்: ஒன்றிய பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஆட்சி மாறும்போதுதான் விடிவு கிடைக்கும் போலும்!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி: த.வெ.க. சட்டமன்ற உறுப்பினராக இராயபுரம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் இரண்டடி வாளைக் கொண்டு கேக் வெட்டிப் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளதும், சென்னையில் சிறுமியிடம் பாலியல்  அத்துமீறலில் ஈடுபட்ட த.வெ.க. வட்டச் செயலாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதும் எதைக் காட்டுகிறது?

– ஆ.செல்வம், எண்ணூர்

பதில்: தமிழ்நாட்டிற்கான தலைகுனிவுச் செய்தி இது! கட்சித் தலைமை வெட்கப்பட வேண்டிய செய்தியும்கூட!

கேள்வி: பிஜே.பி. எந்த வகையிலாவது சதி செய்து மதவாதத்தை எதிர்க்கும் முக்கியத் தலைவர்களை அழிக்கும் முயற்சியை இந்தியா முழுக்க செய்து வரும் நரித் தந்திரத்தைப் பற்றி உங்கள் கருத்து?

– மா.சாக்கியமுனி, நுங்கம்பாக்கம்

பதில்: ‘நரி’ எப்போதும் தந்திரத்தின் மூலம் தானே வாழ முடியும் என்பதை அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். மிகப் பெரிய தொடர்பணி!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி: நாட்டுக்கே வழிகாட்டிய சிறந்த திட்டங்களைத் தீட்டிய நல்ல நிர்வாகத்தைத் தந்த தி.மு.கழகத்தை ஏற்கவில்லையே. சினிமா நடிகரின் மோகம் என்ன விளைவை ஏற்படுத்தும்?

– அ.யுவகாளி, உத்திரமேரூர்

பதில்: திடீர்ப் புயலால், நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாரான நெற்பயிர் நாசமானதுபோல – செழித்து வளர்ந்திருந்த தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் காப்பாற்றும் பொறுப்புமிக்க படித்த அறிவுஜீவி வாக்காளர் களையே கூட தேடித்தான் கண்டறிய வேண்டும்!  இல்லையெனில், பிறகு இதுதான் நடக்கும்!

கேள்வி: “நூற்றாண்டு திராவிட இயக்கக் கொள்கைகளை வீழ்த்திய விசில்” என்று ‘தினத்தந்தி’ தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளதே, இதுகுறித்து தங்கள் கருத்து?

– முகிலன், சென்னை

பதில்: ஏற்கத்தகாத பதில் – திராவிட இயக்க கொள்கைகளையா அவர்கள் வீழ்த்தினார்கள்?  தேர்தல் வெற்றிகள், கொள்கைகளை வீழ்த்திவிடவே முடியாது! அந்த திராவிட இயக்கத்தினரால் சி.பா.ஆதித்தனார் சட்டமன்றத் தலைவராக (அண்ணா ஆட்சியில்) ஆனதுண்டு. அடுத்த 1971க்குப் பிறகு அமைச்சராகவும் ஆனாரே! ஏனோ அது ‘தந்தி’க்கு வசதியாக மறந்துவிட்டதோ!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி: “தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் வராது; தங்கு சட்டமன்றம்தான்” என்று இருந்த நிலை மாறியிருக்கிறதே?

– கண்மணி, மாமல்லபுரம்

பதில்: இப்போது அதன் ‘கொடுமையை’த் தமிழ்நாடு முதல் கட்டத்திலேயே கூட அனுபவிக்கத் தொடங்கிவிட்டதே!

கேள்வி: நடிகர் ரஜினிகாந்த் – தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு எதைக் காட்டுகிறது?

– ஆதவன், சீர்காழி

பதில்: நல்ல நட்புக்கான ஓர் உதாரணம் என்பதைக் காட்டுகிறது!

கேள்வி: தமிழ்நாட்டில் புதிதாக அமையவுள்ள அரசிற்குத் தங்களது ஆலோசனை என்ன?

– ம.மணி, செங்கல்பட்டு

பதில்: ஆட்சியை ஆட்சியாக நடத்துவது முக்கியம்! அது வெறும் காட்சியாக ஆகிவிடக் கூடாது!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *