தமிழ் மொழி மற்றும் திராவிட மொழிக் குடும்பத்தின் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த திராவிட மொழியியலின் தந்தை தமிழ் மொழி மற்றும் திராவிட மொழிக் குடும்பத்தின் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த ‘திராவிட மொழியியலின் தந்தை’ என்று போற்றப்படும் இராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell) அயர்லாந்தில் (கிளாடி, டெர்ரி கவுண்டி). 7.5.1814 அன்று பிறந்தார்.
ஆரம்பக் கல்வியை தனது தாயாரிடமே பயின்று, பின்னர் உயர்கல்வி கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயின்றார். தனது 24-ஆவது வயதில் கிறிஸ்தவ சமயப் பணிக்காக இந்தியா வந்தார்.
கால்டுவெல்லின் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுவது 1856-இல் அவர் வெளியிட்ட “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” (A Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages) என்னும் நூல் ஆகும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகள் அனைத்தும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதை உலகிற்கு ஆதாரங்களுடன் நிரூபித்தார்.
தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியது என்ற அன்றைய தவறான கருத்தை உடைத்து, அது ஒரு தனித்துவமான, உயர்தனிச் செம்மொழி என்பதை நிலைநாட்டினார்.
திராவிட மொழிகளுக்கிடையேயான ஒற்றுமைகளையும், அவற்றின் வேர்ச் சொற்களையும் அறிவியல் ரீதியாக விளக்கினார்.
திருநெல்வேலி ஆய்வு: தனது வாழ்நாளின் பெரும் பகுதியைத் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடி பகுதியில் கழித்தார். அங்குள்ள மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார்.
“திருநெல்வேலி மாவட்ட அரசியல் மற்றும் பொது வரலாறு” என்ற நூலை எழுதினார். அகழ்வாராய்ச்சிகளிலும் ஆர்வம் காட்டிய இவர், கொற்கை போன்ற பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டார்.
இவருடைய மொழியியல் கண்டுபிடிப்புகள் பின்னாளில் ‘தனித்தமிழ் இயக்கம்’ மற்றும் ‘திராவிட இயக்கம்’ வளர மிக முக்கியமான அடித்தளமாக அமைந்தன.
தமிழ்நாடு அரசு இவரது நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் மெரினா கடற்கரையில் இவருக்குச் சிலை நிறுவியுள்ளது.
இவர் வாழ்ந்த இடையன்குடி இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.
2010-ஆம் ஆண்டு இந்திய அரசு இவரது நினைவாக அஞ்சல் தலையை வெளியிட்டது.
