இந்நாள் – அந்நாள்

1 Min Read

சா.ஜே.வே. செல்வநாயகம் நினைவு நாள் இன்று (26.4.1977)

ஈழத் தந்தை செல்வா  என்று உலகத் தமிழர்களால் அழைக்கப்படும் மாபெரும் தலைவரும், அறவழிப் போராட்ட நாயகருமான சா.ஜே.வே. செல்வநாயகம் ஆவார். இவர் 31.3.1898  அன்று மலேசியா நாட்டின் ஈப்போ நகரில் பிறந்தார்.

தனது நான்காம் வயதில் பெற்றோர்களுடன் இலங்கை வந்தடைந்தார். இவர் இலண்டன் பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். கல்லூரிப் பேராசிரியராகவும், குடிசார் வழக்குரைஞராகவும் பணியாற்றினார்.

இவர் இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக இலங்கைத் தமிழ் தேசிய இயக்கத்தை தொடங்கி பாடுபட்டார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இலங்கைத் தமிழர்கள் உரிமைக்கு குரல் கொடுத்தார். இருபதாண்டுகளுக்கு மேல் தமிழ்த் தேசியவாதியாக இலங்கையில் சிறந்த வகையில் போராடியவர். அமைதி வழியில்  அறப்போர் கண்டு பல வெற்றிகளை பெற்றவர். அவருடைய  அறவழிப் போட்டம் நசுக்கப்பட்டதே பி்னனாளில் ஆயுதப் போராட்டத்திற்கான தேவையை உருவாக்கியது.

தமிழ்நாட்டிற்கு வருகை தந்த தந்தை செல்வா தந்தை பெரியாரை சந்தித்து தனது பேரன்பை  பகிர்ந்தார். தமிழர் தலைவர் 2024 ஆண்டு  இலங்கை சென்றபோது தந்தை பெரியாரின்  நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

இலங்கைத் தமிழர் உரிமைக்கு அறவழியில் போராடிய தந்தை செல்வா மறைந்த நாள் (26.4.1977)  இன்று.

வாழ்க தந்தை செல்வா!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *