சென்னை, மே 7 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முதன்முறையாகத் தனித்துப் போட்டியிட்டது அக்கட்சி, 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னையில் உள்ள மொத்தம் 16 தொகுதிகளில் 14 இடங்களை அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
8 மாவட்டங்களில் ஏமாற்றம்
மாநிலத்தின் பல பகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், சில மாவட்டங்களில் தவெகவால் ஒரு இடத்தைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை என்பது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக: கன்னியாகுமரி, தென்காசி, விழுப்புரம் உட்பட மொத்தம் 8 மாவட்டங்களில் அக்கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வாக்கு வங்கி வலுவாக இருப்பதாகக் கருதப்பட்ட இந்த மாவட்டங்களில் பூஜ்ஜியத்தைப் பெற்றுள்ளது.
சென்னை போன்ற நகர்ப்புறங்களில் கிடைத் துள்ள அபாரமான வரவேற்பு ஏன் தென் மாவட்டங்களிலும், குறிப்பிட்ட வட மாவட்டங்களி லும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா சிலையில் த.வெ.க. கொடி
தி.மு.க., அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு
சென்னை, மே 7- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முதல் முறையாக தேர்தலில் களமிறங்கிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் வெற்றியை த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதே சமயம், தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருப்பதால், அதற்கான முயற்சிகளை த.வெ.க. மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் அருகே உள்ள முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா சிலையின் கையில் சிலர் த.வெ.க. கொடியை கட்டி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மேலும், அண்ணா சிலையில் த.வெ.க. கொடி வைக்கப்பட்டதற்கு தி.மு.க., அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காரில் ரகசிய அறைகள் அமைத்து
கடத்தி வரப்பட்ட ரூ.2.27 கோடி ஹவாலா பணம் பறிமுதல்
கேரளவைச் சேர்ந்த இருவர் கைது
கூடலூர், மே 7 கேரள – கருநாடக எல்லைப் பகுதியான முத்தங்கா சோதனைச்சாவடி யில், காரில் ரகசிய அறைகள் அமைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரம் ஹவாலா பணத்தை காவல்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரளாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகன சோதனை
கருநாடக மாநிலம் குண்டல்பேட்டையிலிருந்து கேரளா நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், முத்தங்கா சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் (5.5.2026) காவல்துறை மற்றும் கலால்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கருநாடகாவிலிருந்து கேரளா நோக்கி வந்த ஒரு நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து நான்கு சக்கர வாகனத்தை முழுமையாகச் சோதனையிட்டபோது, நான்கு சக்கர வாகனத்தின் உட்புறத்தில் மிகவும் சாதுர்யமாக உருவாக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான ரகசிய அறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அறைகளுக்குள் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
ரூ.2.27 கோடி
பறிமுதல் செய்யப்பட்ட தொகை: ரூ. 2,27,43,000/- கைது செய்யப்பட்டவர்: சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த ஹர்ஷத் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனத்தையும், ஹவாலா பணத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், கைது செய்யப்பட்ட வரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
“இந்த இமாலயத் தொகை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதன் பின்னணியில் உள்ள மூளையாகச் செயல்பட்டவர்கள் யார்? மற்றும் இந்தப் பணம் யாருக்குச் சொந்தமானது?
என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் எல்லையோரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
