மும்பை, மே 7- ஒரு ஓட்டின் வலிமை என்ன என்பதை திருப்பத்தூர் தேர்தல் முடிவு மூலம் குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் வாக்கின் வலிமையை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்று மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூறி உள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருப்புத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் போட்டியிட்டார். தேர்தலில் பதிவான வாக்கு எண்ணப்பட்ட போது, திமுக-தவெக இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. பல சுற்றுகளில் இரு கட்சிகளும் மாறி,மாறி முன்னிலை வகித்தது.
இறுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் 83,375 வாக்கு பெற்றார். பெரிய கருப்பன் 83,374 வாக்கு வாங்கி இருந்தார்.
இந் நிலையில் ஒரு வாக்கு வரலாற்றை மாற்றிவிட்டது என்று மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூறி உள்ளார். திருப்புத்தூர் தொகுதி தேர்தல் முடிவை தமது எக்ஸ் வலை தள பதிவில் குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார். அதோடு, தேர்தல் ஆணையர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ள திருப்புத்தூர் தொகுதி முடிவுகளையும் பதிவில் இணைத்துள்ளார்.
அண்மையில் வெளியான மாநில தேர்தல் முடிவுகள் (தமிழ்நாட்டை குறிப்பிடுகிறார்) வியக்கத்தக்க வகையில் இருக்கின்றன. என்னை பொறுத்தவரை இந்த ஒளிப்படம் ( திருப்புத்தூர் தேர்தல் முடிவை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையர் போட்டோ) தேர்தல்களில் மிகவும் மறக்க முடியாத ஒளிப்படமாக இருக்கும்.
தமிழ்நாட்டின் திருப்புத்தூர் தொகுதியியில் முன்னிலையில் இருந்து இரு வேட்பாளர்களுக்கு இடையே 1,66,000 வாக்குக்கு மேல் பதிவானது. ஆனால் ஒரேயொரு ஒரு வாக்கினால் சரித்திரம் மாறியது. இந்த போட்டோ நாட்டின் ஒவ்வொரு பள்ளிகளிலும், உலகம் முழுவதிலும் காட்டப்பட வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையும் தாம் வளரும் போது தங்களிடம் மிக பெரிய வலிமை இருப்பதை புரிந்து கொள்வார்கள். ஒரு வாக்குக்கு எவ்வளவு வலிமை உள்ளது என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.
இவ்வாறு தமது பதிவில் அவர் கூறியுள்ளார்.
ஒரு ஓட்டின் வலிமை என்ன என்பதை திருப்பத்தூர் தேர்தல் முடிவு மூலம் குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் வாக்கின் வலிமையை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்று மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூறி உள்ளார்.