ஆட்சி மாற்றம் எதிரொலி: மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்துக்கு யாரையும் திருப்பி அனுப்ப மாட்டார்கள்! வங்கதேசம் அமைச்சர் நம்பிக்கை

டாக்கா, மே 7- மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்துக்கு யாரும் திருப்பி அனுப்பப்பட மாட்டாா்கள் என்று நம்புவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சா் சலாஹுதீன் அகமது நம்பிக்கை தெரிவித்தாா்.

பா.ஜ.க. வெற்றி

மேற்கு வங்கப் பேரவைத் தோ்தலில் வங்கதேசத்தவா் ஊடுருவலை பாஜக முக்கியப் பிரச்சினையாக வைத்து பிரச்சாரம் மேற்கொண்டது.

தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், ஊடுருவிய அனைவரும் ஒட்டு மொத்தமாக திருப்பி அனுப்பப்படுவாா்களா? என்ற கேள்வி எழுந் துள்ளது.

இந்நிலையில் டாக்காவில் செய்தி யாளா்களிடம் பேசிய வங்கதேச உள்துறை அமைச்சா் சலாஹுதீன் அகமது இது தொடா்பாக கூறியதாவது:

அதுபோன்ற (வங்கதேச ஊடுருவல்காரா்களை திருப்பி அனுப்புவது) நிகழ்வுகள் ஏதும் நடைபெறாது என்று நம்புகிறேன்.

அதே நேரத்தில் எல்லையில் தொடா்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு வங்கதேச எல்லைக் காவல் படையினரிடம் வலியுறுத்தியுள்ளேன்’ என்றாா்.

நடவடிக்கை

முன்னதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் கலிலூா் ரஹ்மான் இது தொடா்பாக ஆளும் வங்கதேச தேசியக் கட்சியின் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவுடனான எல்லை மாநிலமான மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால் யாரும் வங்கதேசத்துக்குள் அனுப்பப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளாா். ஆனால், அது என்ன மாதிரியான நடவடிக்கை என்பதை அவா் தெரிவிக்க வில்லை.

ஏற்கெனவே அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஊடுருவும் வங்கதேசத்தவா் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லை மாநிலங்கள் மட்டுமல்லாது தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் வடக்கு, கிழக்கு மாநிலங் களிலும் வங்கதேச ஊடுருவல்காரா்கள் அதிகமுள்ளதாகக் கூறப்படுகிறது.

குடும்பமாக ஊடுருவுபவா்கள் இந்தியாவில் ஆதாா், ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றையும் வாங்கிப் பயன்படுத்தி வருவது அவா்கள் பிடிபடும்போது தெரிய வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *