மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் அன்கித் பாண்டே அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொலி

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கொல்கத்தா, மே 8  ஹிந் துத்துவ அமைப்பைச் சேர்ந்த சமூக விரோதி அங்கித் பாண்டே என்ற பார்ப்பனர் மேற்கு வங்கத்தில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக மிகக் கொடூரமான வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ள காணொலி சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த காணொலியில், அன் கித் பாண்டே பெங்காலி மொழி பேசும் மக்களிடம் கூறியுள்ள தாவது:

“அடுத்த இரண்டு ஆண்டுக ளுக்கு மவுலானாக்களை (இஸ்லாமிய மத குருமார் களை) கொல்லுமாறு நான் பெங்காலிகளைக் கேட்டுக் கொள்கிறேன். முதலில் தாடியைப் பிடித்து இழுங்கள் சதைப்பிய்கிறதே, வலியில் கத்துகிறார்களே என்று இரக்கப்படவேண்டாம், உங்கள் வேலையே அவர்களைக் கொல் வதுதான்  (இஸ்லாமியர்கள் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.” அவர்கள் பன்றிகளைப் போன்று பெற்று கொண்டே இருப்பார்கள் ஆகையால் அவர்களைக் கொலை செய்வது நல்லது என வெறுப்புப் பேச்சுகளைப் பேசியுள்ளார்.

தொடரும் வெறுப்புப் பிரச்சாரம்

அங்கித் பாண்டே இது போன்ற வன்முறையைத் தூண்டும் கருத்துகளைப் பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் மம்தா முதலமைச்சராக இருந்த போதும் சிறுபான்மையினருக்கு எதிராக ஆயுதமேந்தச் சொல்வதும், இனப்படுகொலைக்கு அழைப்பு விடுப்பது போன்ற செயல்களிலும் அவர் ஈடுபட்டார் ஒவ்வொரு முறையும் அவர் கைது செய்யப் பட்டு சிறைசென்று பின்னர் மன்னிப்புக் கேட்டு விடுதலை அடைந்து விடுவார் அல்லது அருகில் உள்ள பிகாருக்கு ஓடி விடுவார்.

தற்போது மேற்கு வங்கத்தில் பாஜக முழு பலத்துடன் வெற்றி பெற்ற நிலையில் மத வெறிப் பேச்சுக்கள் அங்கு மதக் கலவரத்தை உருவாக்கத் திட்டமிட்டே பேசப்படுகிறது.

கடும் நடவடிக்கை

இந்த காணொலி வைர லானதைத் தொடர்ந்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராகப் படுகொலைக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறி அன்கித் பாண்டே மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மேற்கு வங்க காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி, வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *