இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றியவர் மு.க.ஸ்டாலின்! ‘இனமுரசு’ சத்யராஜ்!

1 Min Read

சென்னை, மே 6 தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தோல்வியை கண்டு துவண்டு விடுபவர் கிடையாது என்றும், தி.மு.க.விற்கும், மு.க.ஸ்டாலினுக்கும் தனது ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும் என்றும் நடிகர் சத்யராஜ் தெரி வித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள காணொலியில்,

கடந்த 5 ஆண்டுகளில் டில்லிக்கு அஞ்சாமல் தமிழ்நாட்டிற்கு பல வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார். இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றியவர் மு.க.ஸ்டாலின் என்றும் அவருக்கு மனமார்ந்த நன்றிகள் என்றும் சத்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.

ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும்

இனி வரும் காலங்களிலும், தி.மு.க. விற்கும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தனது ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும் என்றும் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *