பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட குழப்பத்தில், பத்து ரூபாய் நாணயம் தடை செய்யப்பட்டதாகப் பொய்யான செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின.
தற்போது கடைகள், மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால், இது செல்லாது என்று கூறி கடைக்காரர்கள் வாங்க மறுக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், 10 ரூபாய் நாணயம் தற்போதும் புழக்கத்தில் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முதன்முதலில் 2005இல் இந்த நாணயத்தை அறிமுகப்படுத்தியது. இரண்டு உலோகங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ‘பைமெட்டாலிக்’ (bimetallic) நாணயம், இன்றும் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும். ஆகையால், யாராவது இதை வாங்க மறுப்பது தவறு ஆகும்.
2010-ல், இந்திய அரசு ரூபாய் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதற்கு முன்பு வந்த நாணயங்களில் இந்தச் சின்னம் இருக்காது. இதன் காரணமாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட குழப்பத்தில், பத்து ரூபாய் நாணயம் தடை செய்யப்பட்டதாகப் பொய்யான செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின. இதை நம்பி, பொதுமக்களும், வர்த்தகர்களும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கிறார்கள்.
சட்டப்படி, ஒருவர் இந்திய நாணயத்தை ஏற்க மறுத்தால், அவர் மீது புகார் அளிக்கலாம். மேலும், பத்து ரூபாய் நாணயங்கள் போலி கிடையாது, அசல் என்று இந்திய ரிசர்வ் வங்கி விளம்பரங்கள் மூலம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. ஆகையால், பொதுமக்கள் இவற்றை அச்சமின்றிப் பயன்படுத்தலாம்.
சில இடங்களில் கள்ள நாணயப் பிரச்சினை பற்றிய சந்தேகம் இருக்கலாம். ஆனால், நாணயங்களின் முழுத் தொடரையும் கள்ள நாணயம் என்று அழைப்பது தவறு. இந்த நாணயங்கள் இன்றும் வங்கிகளில் பெறப்பட்டு வழங்கப்படுகின்றன. வங்கிகள் வர்த்தகம் செய்யும்போது நாம் ஏன் தயங்க வேண்டும்? சந்தேகங்கள் இருந்தால், வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று சரிபார்க்கலாம். வதந்திகளை நம்ப வேண்டாம்.
