பிரான்சில் துணைமேயரான தமிழ்ப் பெண்!

1 Min Read

இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண் ஆதித்யா ஆனந்தராசா, பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுள்ளார்.

ஆதித்யா ஆனந்தராசா, யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை பகுதியைச் சேர்ந்தவர். இவர் பிரான்ஸ் நாட்டில் துணை மேயராக பொறுப்பேற்று இருப்பது. வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட ஆதித்யா, 19 வயதிலேயே பொன்டால்ட்-கொம்பால்ட் நகர்மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

தொடர்ந்து பொதுச்சேவையில் ஈடுபட்டு, மக்களுடன் நெருக்கமாக செயல்பட்டதன் பலனாக தனது 25ஆவது வயதில் துணை மேயர் பதவியை அடைந்துள்ளார்.

ஆதித்யாவின் இந்த முன்னேற்றம், இளம் தலைமுறையினரை அரசியல் மற்றும் பொதுச் சேவையில் ஈடுபட ஊக்கமளிக்கும் சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.

மேலும், பல்வேறு சமூகங்களுடன் இணைந்து செயல்படுவதிலும், உள்ளூர் நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் ஆதித்யா ஆனந்தராசா முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன் மீதான எதிர்பார்ப்புகளை அவர் எவ்வாறு பூர்த்தி செய்கிறார் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *