ஜிஎஸ்டி வரி குறைப்பால் உணவுப் பொருட்களின் விலை குறையவில்லை! மோடி அரசின் பொய் அம்பலமானது

புதுடில்லி, மே 3 ஜிஎஸ்டி வரி குறைப் புக்குப் பின்னும் உணவுப் பொருட்களின் விலை கள் உயர்ந்துள்ளது என நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா அதிர்ச்சி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பேங்க் ஆப் பரோடாவின் பொருளாதார ஆராய்ச்சித் துறை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “ஜிஎஸ்டி 2.0-இன் கீழ் கொண்டு வரப்பட்ட வரி விகிதக் குறைப்புகள், கார்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகளை மட்டுமே கணிசமாகக் குறைத்துள்ளன. ஆனால் மக்களின் உயிர்வாழ்வு துறையான உணவுத்துறையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அதாவது உணவுப் பொருட்கள் மற்றும் தனிநபர் பராமரிப்புப் பொருட்களின் விலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. அதே சமயத்தில் லேசான அளவில் விலையேற்றமும் ஏற்பட்டுள் ளது. ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பதன் பின்னணியில் இருந்த முக்கியமான நோக்கம், பொருட்களின் விலையைக் குறைத்து அதன் மூலம் நுகர்வை அதி கரிப்பதாகும். ஆனால் வரி குறைக்கப்பட்ட போதிலும், அதன் பலன் இறுதி விலையில் அனைத்துப் பொருட்களுக்கும் சமமாகப் போய்ச் சேரவில்லை என ஆய்வு காட்டுகிறது” என்று பேங்க் ஆப் பரோடா கூறியுள்ளது.

மோடி அரசின் பொய் அம்பலம்

செப்டம்பர் 2025 முதல் ஜிஎஸ்டி சீரமைப்பு நடைமுறைக்கு வந்தது. பெரும்பாலான பொருட்களுக்கான வரி 18% அல்லது 12%-லிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டது அல்லது முழுமை யாக விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஜிஎஸ்டி சீரமைப்பால் மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்துள்ளது; அனைத்து பொருட்களின் விலை குறைந்துள்ளதால் மக்கள் பணக் காரர்களாக மாறிவிட்டனர் என மோடி அரசு நாளிதழ்களில் விளம்பரம் செய்து பெருமை பாடியது. ஆனால் உண்மை நிலவரத்தை பேங்க் ஆப் பரோடா போட்டுடைத்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *