3 மாதங்களில் வணிக எரிவாயு உருளை விலை 81 சதவீதம் உயர்வு ராகுல் காந்தி குற்றச்சாட்டு

1 Min Read

புதுடில்லி, மே 2 கடந்த 3 மாதங்களில் வணிக சமையல் எரிவாயு (கேஸ்) விலை 81 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தேர்தலுக்குப் பிறகு விலைவாசி உயரும் என்று ஏற்கெனவே நான் சொல்லியிருந்தேன்.

இன்றைய நாள் வணிக சமையல் எரிவாயு உருளை ரூ.993 விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரே நாளில் கணிசமாக விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதுதான் தேர்தல் கட்டணம். கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 3 மாதங்களில் மட்டும் வணிக எல்பிஜி விலை ரூ.1,380 விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது 81 சதவீதம் வரை விலை உயர்ந்திருக்கிறது.

வணிக எல்பிஜி விலை உயர்வால் தேநீர் கடை, உணவு விடுதி, அடுமனை  (பேக்கரி) இனிப்புக் கடைகள் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். முதல்கட்டமாக எல்பிஜி சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும். இவ்வாறு ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *