கீழடி அகழாய்வில் கிடைத்த சாயக் கிண்ணங்கள் சங்க காலத்தில் சாயத் தொழிற்சாலை குவியும் சான்றுகள்

1 Min Read

சிவகங்கை, மே 2 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 11 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வில், தமிழ்நாட்டின் பண்டைய நாகரிகம் மற்றும் தொழில்துறை குறித்த வியக்கத்தக்க ஆதாரங்கள் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றன.

தொடராக கண்டெடுக்கப்படும்
சாயக் கிண்ணங்கள்

தற்போது நடைபெற்று வரும் அக ழாய்வில், ஒரே இடத்தில் தொடர்ச்சியாக 10-க்கும் மேற்பட்ட சாயக் கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்களிடையே பெரும் ஆச்சரி யத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறிய அளவிலான கிண்ணங்கள், பழங்காலத்தில் துணிகளுக்கு வண்ணம் தீட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்தக் கிண்ணங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட செங்கல் கட்டுமானத்தின் உட்புறமே கண்ட றியப்பட்டுள்ளன.

செங்கல் சுவர்களுக்கு இடையே வரிசையாக இந்தக் கிண்ணங்கள் இருப்பது, இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல என்பதை உணர்த் துகிறது.

இப்பகுதியில் பண்டைய காலத்தில் ஒரு பெரிய அளவிலான சாயத் தொழிற்சாலை (Dyeing Unit) செயல்பட்டிருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் வலுவாகக் கருதுகின்றனர்.

ஏற்ெகனவே கீழடியில் நெசவுத் தொழி லுக்குத் தேவையான தறிகள் மற்றும் துணி களில் துளையிடும் கருவிகள் கிடைத்துள்ள நிலையில், தற்போது கிடைத்துள்ள சாயக் கிண்ணங்கள் சங்க கால தமிழர்களின் மேம்பட்ட ஆடைத் தொழில் நுட்பத்திற்குச் சான்றாக அமைந்துள்ளன.

‘‘ஒரே இடத்தில் இத்தனை கிண் ணங்கள் கிடைப்பது அரிதானது. இது கீழடி ஒரு சிறந்த வணிக மய்யமாகவும், உற்பத்தித் தளமாகவும் விளங்கியதை உறுதிப்படுத்துகிறது’’ என்று — தொல்லியல் ஆர்வலர்கள் கருத்து தெரி வித்துள்ளனர்.

இந்தக் கிண்ணங்களில் ஒட்டியுள்ள தாதுக்கள் மற்றும் நிறமிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்யத் தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நம் முன்னோர்கள் என்ன மாதிரியான இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தினார்கள் என்ற விவரம் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *