செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய பெருங்கடல்? ‘பாத் டப் ரிங்’ ஆதாரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்!

2 Min Read

செவ்வாய் கிரகத்தின் 3இல் ஒருபகுதியை ஒரு காலத்தில் பெருங்கடல் மூடியிருந்ததா? கலிபோர்னியா தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகள் கண்டறிந்த ‘பாத் டப் ரிங்’ புவியியல் ஆதாரம் மற்றும் அதன் வியக்க வைக்கும் உண்மைகள் என்ன?

செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் 3இல் ஒருபகுதியை மூழ்கடித்திருக்கும் அளவிற்கு பெருங்கடல் இருந்திருக்கக்கூடும் என்பதற்கான மிக வலுவான புவியியல் ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தைச் (Caltech) சேர்ந்த ஆய்வாளர் அப்துல்லா ஜாகி மற்றும் புவியியல் பேராசிரியர் மைக்கேல் லாம்ப் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ‘நேச்சர்’ இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வறிக்கையில், செவ்வாயின் மேற்பரப்பில் ‘பாத் டப் ரிங்’ (குளிக்கும் தொட்டியில் நீர் வடிந்த பிறகு ஏற்படும் தடம்) போன்ற ஒரு அகலமான, தட்டையான நிலப்பரப்பு இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இது பழங்காலப் பெருங்கடலின் எல்லையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஏரியா? கடலா?

செவ்வாயில் திரவ நீர் இருந்ததை விஞ்ஞானிகள் முன்பே அறிந்திருந்தாலும், அவை ஏரிகளாக இருந்ததா? பரந்து விரிந்த பெருங்கடல்களாக இருந்ததா? என்பதில் நீண்டகாலமாக விவாதம் நிலவி வந்தது. தீர்வு காண, ஆராய்ச்சியாளர்கள் பூமியில் ஒரு கணினி உருவகப்படுத்துதலை மேற்கொண்டனர். பூமியில் உள்ள அனைத்துப் பெருங்கடல்களையும் நீக்கினால் எந்த மாதிரியான புவியியல் அடையாளங்கள் எஞ்சியிருக்கும் என்று அவர்கள் சோதித்தனர். அப்போது, கண்டங்களை சுற்றி அமையும் அகலமான, தட்டையான நிலப்பரப்பான ‘கண்டத் திட்டுக்கள்’ (Continental Shelves) நீண்ட காலம் அழியாமல் இருப்பதை அவர்கள் கவனித்தனர்.

இதே போன்ற நிலப்பரப்பைச் செவ்வாயின் வட அரைக்கோளத்தில் விண்கலங்கள் அனுப்பிய தரவுகள் மூலம் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மேலும், பழங்கால நதிப் படுகைகள் (River Deltas) அனைத்தும் இந்த ‘பாத் டப் ரிங்’ எனப்படும் நிலப்பரப்பின் எல்லையிலேயே முடிவடைகின்றன. இது ஒரு தனித்த ஏரியாக இல்லாமல், ஒரு பெரிய பெருங்கடலின் கரையாக இருந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இத்தகைய நிலப்பரப்புகள் உருவாவதற்குப் பல மில்லியன் ஆண்டுகள் ஆகும்.

உயிர் வாழ சாத்தியக்கூறு:

எனவே, செவ்வாயில் இருந்த பெருங்கடல் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மறைவதற்கு முன்னால், மிக நீண்ட காலம் நிலைத்திருந்திருக்க வேண்டும். பூமியில் கடற்கரை படிமங்களில் எப்படி பழங்கால உயிரினங்களின் தடயங்கள் காணப்படுமோ, அதே போல் செவ்வாயின் இந்த நிலப்பரப்பிலும் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கலாம். காற்று, எரிமலை செயல்பாடுகளால் செவ்வாயின் பல பழைய அடையாளங்கள் அழிந்துவிட்ட போதிலும், இந்தப் புதிய கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகம் ஒரு காலத்தில் ஈரப்பதமாகவும், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலிலும் இருந்திருக்கலாம் என்ற வாதத்தை வலுப்படுத்தி உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *