மே 1 முதல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் உயர வாய்ப்பு விநியோகத்திற்கும் புதிய கட்டுப்பாடுகள்

சென்னை, ஏப். 30 – 2026 மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) விலைகள் மீண்டும் உயர்த்தப் படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே வீட்டுப் பயன் பாட்டிற்கான 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ. 60 உயர்த்தப்பட் டது. வணிக நோக்கங்களு க்காகப் பயன்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர்களின் விலையும் ஒரே மாதத்தில் பலமுறை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், மே 1 அன்று, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மேலும் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

மே 1 முதல், சமையல் எரி வாயு சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோக முறை களில் புதிய கட்டுப்பாடு களும் விதிக்கப்படுகின்றன.

வீட்டுப் பயன்பாட்டு சிலிண்ட ர்களை முன்பதிவு செய்வதற் கான இடைவெளி தற்போது நகர்ப்புறங்களில் 25 நாட்கள், கிராமப்புறங்களில் 45 நாட்கள் என்று உள்ளது.

இந்த கால இடைவெளி யைப் பின்பற்றி, எரிவாயு சிலிண்டருக்கு முன்பதிவு செய்வோருக்கு, சிலிண்டர் விநியோகமானது முழு மையாக ஓடிபி (OTP) அடிப் படையிலேயே மேற் கொள்ளப்பட உள்ளது.

சிலிண்டர் முன்பதிவு செய்யும் போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு நான்கு இலக்க ஓடிபி அனுப்பப்படும்.

சிலிண்டர் டெலிவரி செய்ய ப்படும் நேரத்தில் அந்த ஓடிபியை வழங்கினால்தான் டெலிவரி நிறைவேறும்.

இந்த முறையை “டெலிவரி உறுதிப்படுத்தல் குறியீடு” என்று அழைக்கப்படுகிறது. சிலிண்டர் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்ப னையை தடுக்கும் வகையில் ஏற்கெனவே, ஒன்றிய அரசு பல நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது.

அதில் முக்கியமானதாக, அனைத்துப் பயனாளர்களும் கேஒய்சி செயல்முறையை கட்டாயமாக முடிக்க வேண் டும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு பயோ மெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இ-கேஒய்சி-அய் முடித்த பயனர்களுக்கு இது பொருந்தாது.

இன்னும் சரி பார்ப்பை முடிக்காத பய னர்கள் இந்த செயல்முறை யை முடிக்க வேண்டும். சரி யான நேரத்தில் எரிவாயு மானியத்தைப் பெறவும், கணக்கு விவரங்களை முறையாகப் பராமரிக்கவும், எதிர்காலத்தில் தடையற்ற சேவைகளை உறுதி செய்ய வும் இ-கேஒய்சி-அய் முடிக்க வேண்டும் என்று அதிகா ரிகள் பரிந்துரைக்கின்றனர். நகரங்களில் ஏற்கெனவே குழாய் வாயு வசதி உள்ளவர்கள், எல்பிஜி இணைப்பை விட்டுவிட்டு குழாய் வாயு இணைப்புக்கு மாறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு மின் வாரியத்திற்கு ரூ.17,307 கோடி மானியம்

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு!

சென்னை, ஏப்.30 தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வரும் இலவச மற்றும் மானிய விலை மின்சாரத் திட்டத்தைத் தடையின்றி செயல்படுத்த, தமிழ்நாடு அரசு நடப்பு நிதியாண்டில் 17,307 கோடி ரூபாயை மின் வாரியத்திற்கு மானியமாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள், விவசாயிகள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க பல்வேறு பிரிவுகளின் கீழ் மின்சாரச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. 2026-2027ஆம் நிதியாண்டிற்கான இந்த மானியக் கணக்கீட்டில், மொத்தம் 14 பிரிவுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது:

வீட்டு மின்சாரம்: முதல் 100 யூனிட் இலவசம் மற்றும் 500 யூனிட் வரையிலான மானியத்திற்காக அதிகபட்சமாக ரூ.8,428 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயம்: விவசாய மின் இணைப்புகளுக்கு முழுமையான இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

பிற பிரிவுகள்: குடிசை வீடுகள், விசைத்தறிகள், கைத்தறிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றுக்கும் மானிய விலையில் மின்சாரம் வழங்கப்பட உள்ளது.

ஆணையத்தின் முக்கிய நிபந்தனைகள்

மின் வாரியத்தின் நிதிச் சுமையைக் குறைக்கவும், நிதி நிர்வாகத்தைச் சீராக வைத்திருக்கவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது:

தவணை முறை: மொத்த மானியத் தொகையான ரூ.17,307 கோடியையும் ஒரே தவணையாக வழங்காமல், 4 காலாண்டுகளாகப் பிரித்து மின் வாரியத்திடம் அரசு ஒப்படைக்க வேண்டும்.

ஒவ்வொரு காலாண்டிற்கும் உரியத் தொகையை அந்தந்த காலக்கட்டத்திலேயே விடுவிப்பதன் மூலம் மின் வாரியத்தின் செயல்பாடுகள் தொய்வின்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

“அரசின் இந்த முறையான நிதி ஒதுக்கீடு மற்றும் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள், மின் வாரியத்தின் நிதி நிலையை மேம்படுத்துவதுடன், பொதுமக்களுக்குத் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யப் பெரிதும் உதவும்.”

இந்த உத்தரவின் மூலம், தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டமான இலவச மின்சாரத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்வதுடன், மின் வாரியத் தின் நிதி நிர்வாகமும் முறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *