ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சிவகங்கை, ஆக. 25– அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதிய பணியாளர்கள், கணினிகள் இல்லாததால், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டம் செப்டம்பரில் முழுமையாக செயல்படுத் துவதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது.

உடல்நலம் பாதிப்பால் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள், ஒவ்வொரு முறையும் ஏற்கெனவே பெற்ற சிகிச்சை விவரங் களைத் தெரிவிக்க வேண்டியுள்ளது. பெரும் பாலானோர் அந்தந்த நேரங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கு மட்டுமே சிகிச்சை பெறுவதால், தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படு கின்றன.

இதைத் தவிர்க்க, ஒன்றிய அரசு ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டதை செயல் படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் இணைய விரும்புவோர் www.abha.abdm.gov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்து, 14 எண் கொண்ட அடையாள அட்டையை (ஆபா) பதிவிறக்கம் செய்ய வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பதிவு செய்து தருகின்ற னர். தங்களது கைத்தொலை பேசி மூலமாகவும் பதிந்துகொள்ள முடியும்.

மேலும், சிகிச்சைக்கு செல்வோர் இந்த அட்டையை கொண்டு சென்றால் போதுமானது. அதில் நோய், பரிசோ தனை, சிகிச்சை உள் ளிட்ட விவரங்கள் பதி வேற்றம் செய்யப்படும். இதன்மூலம், எந்த ஊரில் வேண்டுமானாலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். ஏற்கெனவே சிகிச்சை பெற்ற ஆவணங்களை எடுத்துச் செல்லத் தேவை யில்லை.

மேலும் ‘ஆபா’ அட்டையுடன் மருத்து வக் காப்பீட்டுத் திட்ட அட்டைகளும் இணைக்கப் படும். இதனால் காப்பீடு அடிப்படையில், நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட எந்த மருத்துவமனையிலும் இலவசமாக சிகிச்சை பெற முடியும். இத்திட்டத்தில் தமிழ்நாடு சுகாதாரத் துறை தீவிரம் காட்டாமல் இருந்தது. இதனால், பலரும் ஆபா அட்டை பெறவில்லை. தற்போது, இத்திட்டத்தை செப்டம்பர் மாதத்திலிருந்து முழு மையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இங்கு நாள்தோறும் பல ஆயிரம் பேர் சிகிச் சைக்காக வருகின்றனர். அவர்களுக்கான மருந்துகள் மட்டுமின்றி ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் மற்றும் இதர ஆய்வக முடிவுகளையும் இணையவழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு போதிய கணினிகள், பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், அதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறை செய்யாததால், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தினால், இணையவழியில் பதிவேற்றம் செய்வதற்காக ஒவ்வொரு துறைக்கும் கூடுதல் பணியாளர் கள் நியமிக்கப்படுவதோடு, கணினிகளையும் வழங்க வேண்டும். இல்லை யெனில், மருத்துவப் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித் தனர். இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேட்ட போது, ’நோயாளிகளுக்கு ஆபா அட்டைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. போதிய கணினி வசதிகளும் கேட் டுள்ளோம்’ என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *