இந்து கோவில்களுக்குள் மாற்று மதத்தினர் வழிபாடு விஜய்யின் ஆன்மிகப் பயணம்; சட்ட விதிகள் சொல்வது என்ன?

2 Min Read

தூத்துக்குடி, ஏப்.29 தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் ஷீரடி சாய் பாபா கோவில்களுக்குச் சென்றது பெரும் விவாதங்களை உருவாக்கி யுள்ளது. குறிப்பாக, மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்து கோவில் களுக்குள் நுழைவது குறித்த சட்டப் பூர்வமான நெறிமுறைகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் என்ன சொல்கின்றன.

சட்ட வரையறை 

தமிழ்நாடு இந்து சமய அற நிலையத்துறைச் சட்டம் மற்றும் 1947-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு கோவில் நுழைவு அங்கீ காரச் சட்டத்தின் படி, கோவில்கள் என்பவை இந்துக்களுக்கான வழி பாட்டுத் தலங்களாகவே பிரத்யேக மாக வரையறுக்கப்பட்டுள்ளன.

 ஆகம விதிமுறை

தமிழ்நாட்டின் பழமையான மற்றும் ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்களில் ஒரு முக்கிய மரபு பின்பற்றப்படுகிறது. இதன்படி:

மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலின் ‘கொடிமரம்’ தாண்டி உள்ளே செல்ல அனுமதி இல்லை. இது காலம் காலமாகப் பின்பற்றப் படும் வழிபாட்டு நடைமுறையாகப் பார்க்கப்படுகிறது.

உயர்நீதிமன்றத்தின்
அதிரடித் தீர்ப்பு (2024)

சமீபத்தில் பழனி முருகன் கோவில் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஒரு தீர்ப்பை வழங்கியது. நீதிபதி சிறீமதி தனது தீர்ப்பில் குறிப்பிடும்போது

“கோவில்கள் என்பவை சுற்றுலாத் தலங்கள் அல்ல; அவை ‘புனித’மான வழிபாட்டுத் தலங்கள். எனவே, மாற்று மதத்தினர் கொடிமரம் தாண்டி உள்ளே செல்வதை அனுமதிக்கக் கூடாது.” என்று கூறியிருந்தார்.

விதிவிலக்கும்
‘உறுதிமொழிப் பத்திரமும்’

மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் இறை நம்பிக்கை காரணமாகக் கோவிலுக்குள் சென்று வழிபட விரும்பினால், அதற்குச் சட்டத்தில் ஒரு வழிமுறை உள்ளது:

அவர் இந்து மதக் கடவுள் மீதும், அந்த மதத்தின் வழிபாட்டு முறைகள் மீதும் தனக்கு முழுமை யான நம்பிக்கை இருப்பதாக எழுத்துப் பூர்வமாக ‘உறுதிமொழி’ அளிக்க வேண்டும்.

அத்தகைய உறுதிமொழியை வழங்கினால் மட்டுமே அவர் கொடிமரம் தாண்டிச் செல்ல அனுமதிக்கப்படுவார். சுருக்கமாக: அரசியலுக்காகவோ அல்லது தனிப்பட்ட பயணமாகவோ மாற்று மதத்தினர் கோவிலுக்குச் செல்லும்போது, அவை வழிபாட்டுத் தலங்களின்  சட்ட விதிகளை மீறாத வகையில் இருக்க வேண்டும் என்பதே தற்போதைய சட்ட நிலைப்பாடாக உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *