கோடை வெப்பம் – மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ். கரைசல் இலவசமாக வழங்க வேண்டும் – சுகாதாரத்துறை உத்தரவு

1 Min Read

சென்னை, ஏப். 28- தமிழ் நாட்டில் கோடை வெப்பம் உச்சம் அடைந்திருப்பதால் மருத்துவ மனைகளில் ஓ.ஆர்.எஸ். கரைசல் இலவசமாக வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டின் கோடைகாலம் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கி, தற்போது உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை, வேலூர், மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகி வருகிறது. இந்த கடுமையான வெப்பம் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்ப தோடு, கடுமையான உடல்நலச் சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய ஓஆர்எஸ் கரைசல் இருப்பில் வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை வேண்டு கோள் விடுத்துள்ளது.

விவசாய கூலித் தொழிலா ளர்கள், கட்டுமான தொழிலா ளர்கள், சாலையோர வியாபாரி களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கவும், மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke) என்ற சிறப்பு வார்டு அமைக்கவும் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஹீட் ஸ்ட்ரோக்கில் உயிரிழப் புகளை தடுக்க மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *