நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல்: ஒருவர் பிடிபட்டார்!

2 Min Read

நாகப்பட்டினம், ஏப். 28– நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது நடுக் கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி, உடமைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலில் கடற்கொள்ளையர் ஒருவரை மீனவர்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த 25ஆம் தேதி செருதூரிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மூன்று வெவ்வேறு படகு களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப் பட்டுள்ளன.

மணிவாசகன் என்பவரது படகில் 5 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 3 படகுகளில் வந்த 9 கடற்கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டித் தாக்கினர்.

இதில் மணி வாசகன், வேலு, சக்திவேல் ஆகியோர் காயமடைந் தனர். இவர்களிடமிருந்து ஜிபிஎஸ் கருவி, கைபேசி கள், வலைகள் மற்றும் 40 கிலோ மீன்கள் பறிக்கப் பட்டன

இன்னொரு நிகழ்வில், சதீஷ் என்பவரது படகில் இருந்த மீனவர் களைத் தாக்கிய 3 கொள்ளையர்கள், அவர்களிடமிருந்து ஜிபிஎஸ் கருவி, காஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர். இதில் சதீஷ் உட்பட மூவர் காயமடைந்தனர்.

அதேபோல் மற்றொரு நிகழ்வில், கோபால் என்பவரது படகில் இருந்தவர்களைத் தாக்கி 50 கிலோ மீன்கள் மற்றும் கைபேசிகளை பறித்துச் சென்றனர். இதில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாலமுருகன் என்பவரது படகில் சென்ற மீனவர்கள், ஆறுகாட்டுத்துறைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த 3 இலங்கை கடற் கொள்ளையர்கள் மீனவர்களின் வலையை அறுக்க முயன்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த செருதூர் மீனவர்கள், கொள்ளையர்களுடன் நடுக்கடலில் துணிச்சலாகப் போராடினர்.

இதில் மற்ற இருவர் தப்பி ஓடிய நிலையில், இலங்கை காங்கேசன் துறை வழலையைச் சேர்ந்த அயந்தன் (27) என்பவரை மீனவர்கள் மடக்கிப் பிடித்தனர்.

பிடிபட்ட கடற் கொள்ளையன் அயந்தன் நேற்று (27.4.2026) காலை செருதூர் கடற் கரைக்கு அழைத்து வரப்பட்டு, கீழையூர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தாக்குதலில் காய மடைந்த அவரும், பாதிக்கப்பட்ட மற்ற மீனவர்களும் நாகப் பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து கீழையூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடுக்கடலில் நடந்த இந்த மோதல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நாகப்பட்டினம் கடலோரப் பகுதிகளில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *