போர் நிறுத்தம் – ஹார்மூஸ் நீரிணை, அணுசக்தி விவகாரம்: அமெரிக்காவுக்கு ஈரான் 3 நிபந்தனைகள்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெஹ்ரான், ஏப். 28- அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது.

பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கு இடையே 2ஆம் கட்டப் பேச்சு வார்த்தை நடைபெறாததை தொடர்ந்து, ஈரான் இந்த அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளது. போர் நிறுத்தம், ஹார்முஸ் நீரிணையின் மேலாண்மை, அணுசக்தி விவகாரம் ஆகியவற்றை மய்யமாக வைத்து இந்தத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டம்: ஈரான் மற்றும் லெபனான் மீது போர் தொடுக்கப்படாது என்பதற் கும், போர் முழுமையாக நிறுத்தப் படுவதற்கும் அமெரிக்கா முறையான உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இரண்டாம் கட்டம்: முதற்கட்ட நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே, பன்னாட்டு கடல் வழிப் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்மூஸ் நீரிணை நிர்வாகம் மற்றும் மேலாண்மை குறித்து ஆலோசிக்கப்படும்.

மூன்றாம் கட்டம்: மேற்கண்ட இரு நிலைகளும் வெற்றிகரமாகக் கடந்த பின்னரே, அணுசக்தி விவகாரம் குறித்து ஈரான் விவாதிக்கும். ஈரானின் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்டகால கோரிக்கை இதில் அடங்கும். அமெரிக்காவின் எதிர்வினை ஈரானின் இந்த முன்மொழிவு குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒலிவியா வேல்ஸ் கூறுகையில், “இவை மிகவும் நுணுக்கமான ராஜதந்திர விவகாரங்கள்.

பத்திரிகைகள் வாயிலாக அமெ ரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது. அமெரிக்க மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம். ஈரான் அணு ஆயுதம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். 4 மடங்கு தாக்குதல் ஈரான் துணை அதிபர் இஸ்மாயில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், ‘‘எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம்.

எங்கள் கணக்கு வித்தியாச மானது. எங்களின் ஒரு எண் ணெய் கிணறு பற்றி எரிந்தால், அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் வளைகுடா நாடுகளில் 4 எண்ணெய் கிணறுகள் பற்றி எரியும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *