ஜெய்ப்பூர், ஏப். 26- நீதிமன்றங் களுக்கு வெளியே வழக்குகளைத் தீர்க்கும் மாற்றுத் தீர்வு முறைகளில் (ADR), ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதற்காகத் தேசிய அளவிலான பதி வேடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் வலியுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூரில் நடைபெற்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கான மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியதாவது:
மத்தியஸ்தம், லோக் அதாலத், சமரசம் மற்றும் நடுவர் மன்றம் போன்றவை வெறும் மாற்று வழிகள் மட்டுமல்ல; அவை கோடிக் கணக்கான இந்தியர்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரே திறவுகோல். மக்கள் புரிந்து கொள்ளும் மொழி யில், விரைவாக வழங்கப்படும் நீதியே உண்மையான நீதியாகும்.
திபதிகள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் சட்ட அறிவு மற்றும் அனுபவம் பயன்படுத்தப்படாமல் போவது நாட்டிற்குப் பெரும் இழப்பாகும். இவர்களின் சேவையைப் பின்வரும் வழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம்:
மத்தியஸ்தர்கள்:
வணிகம் மற்றும் குடும்பச் சிக்கல் களில் நடுநிலையுடன் தீர்வு காண இவர்களைப் பயன்படுத்தலாம்.
பள்ளி, கல்லூரிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் சாமானிய மக்களுக்குச் சட்ட உரிமைகளை எளிய மொழியில் எடுத்துரைக்க இவர்களால் முடியும்.
அடுத்த தலைமுறை வழக்குரை ஞர்களுக்கும், மத்தியஸ்தர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக இவர்கள் திகழ முடியும்.
முன்நிலைத் தீர்வு:
ஒரு பிரச்சினை நீதிமன்ற வழக்காக மாறும் முன்பே, சட்டப் பணிகள் ஆணைக் குழுக்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கி சமரசம் செய்ய இவர்களின் அனுபவம் உதவும். “மழைக்காலத்தில் நீரைச் சேமித்து, வறட்சிக் காலத்தில் உதவும் ‘உறைகிணறுகளை’ போன்றவர்களே ஓய்வு பெற்ற நீதிபதிகள். பாலைவனத்தில் தேங்கியிருக்கும் நீரைப் போல இவர்களின் அனுபவம் விலைமதிப்பற்றது” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி சூர்ய காந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
