அதிக இடங்களில் வெற்றிபெற்று தி.மு.க. ஆட்சி அமைக்கும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உறுதி

1 Min Read

சென்னை, ஏப்.26  தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும் என, சென்னையில் வாக்கு செலுத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.4.2026 அன்று நடைபெற்றது. இதையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, தியாகராயர் நகர் தக்கர் பாபா வித்யாலயா பள்ளியிலும், மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வியாசர்பாடி மூர்த்தி நகரில் உள்ள நடுநிலைப் பள்ளியிலும் தங்களது வாக்குகளைச் செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆவடி மாநகராட்சியில் உள்ள கோயில் பதாகை தொடக்கப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.

டி.ராஜா

பின்னர், செய்தியாளர்களிடம் டி.ராஜா கூறியதாவது:

நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்கு செலுத்துவது என்பது ஒரு முக்கியமான உரிமையாகும். இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதேபோல், மேற்கு வங்கத்திலும் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு பாஜகவின் பேரழிவு தரும் சித்தாந்தத்துக்கு எதிராக போராடுவதைப் போலவே, வங்காள மக்களும் பாஜகவை எதிர்த்துப் போராடி தோற்கடிக்க வேண்டும்.

பெ.சண்முகம்

மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று, ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். நம்மை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கக் கூடியது இந்த தேர்தல். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அதிகமான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும். இதற்கான அறிகுறிகள் தமிழ்நாடு முழுவதும் தென்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்
பெ. சண்முகம் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *