லெபனான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு: டிரம்ப் அறிவிப்பு

2 Min Read

வாசிங்டன், ஏப். 25- லெப னான் – இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், அதனை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்.28ஆம் தேதி தாக்குதலை தொடங்கியதை அடுத்து, ஈரான் ஆதரவுபெற்ற ஆயுதக் குழுவான லெபனானின் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதை யடுத்து, ஈரானுக்கு எதிரான தாக்குதலை நடத்திக் கொண்டே லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்தது. இதில், ஹிஸ்புல்லா தலைவர்கள் பலர் உயிரிழந்ததோடு, லெபனான் பொருளாதார ரீதியாகவும் கடும் பின்னடைவைச் சந்தித்தது.

இந்நிலையில், லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த வாரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதற்கான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டது. அமெரிக்காவில் உள்ள லெபனான் மற்றும் இஸ்ரேல் தூதர்கள் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இந்தப் போர் நிறுத்தம் கடந்த 20.4.2026 அன்று முடிவுக்கு வந்த நிலையில், அதனை மேலும் நீட்டிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வாசிங்டன் டி.சி.யில் அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் நேற்று முன்தினம் (ஏப்.23) நடைபெற்றது.

இதில், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீ, லெபனானுக்கான அமெரிக்க தூதர் மைக்கேல் இசா, அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் யெச்சியல் லீட்டர், அமெரிக்காவுக்கான லெபனான் தூதர் நாடா மோவாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டொனால்டு டிரம்ப்பின் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு டிரம்ப், “போர் நிறுத்தம் மூன்று வார காலத்துக்கு நீட்டிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் ஆகியோரை விரைவில் வெள்ளை மாளிகையில் வரவேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஹிஸ்புல்லாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள லெபனானுக்கு உதவ அமெரிக்கா அதனுடன் இணைந்து செயல்படும்” என தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஹிஸ்புல்லா பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பேசிய அமெரிக் காவுக்கான இஸ்ரேல் தூதர் யெச்சியல் லீட்டர், ஹிஸ்புல்லாவுக்கு எதிராகவும், ஈரான் புரட்சிகர காவல் படைக்கு எதிராகவும் மென் மையாக செயல்படுவது, நமது ஒரே நோக்கான  இலக்கை அடை வதற்கான செயல்முறையை சாத்தியமற்றதாகவே மாற்றும் என தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *