தலைமைத் தேர்தல் ஆணையரை
பதவி நீக்கம் செய்யக்கோரி தாக்கீது:
புதுடில்லி, ஏப்.25 இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, மீண்டும் ஒருமுறை பதவி நீக்க தாக்கீதை – காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 73 மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ள னர். தொகுதி மறுவரையறை மசோ தாவில் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, உற்சாகம டைந்துள்ள எதிர்க்கட்சிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
மாநிலங்களவை
பொதுச்செய லாளரிடம்…
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகரிகா கோஸ் ஆகியோர் மாநிலங்களவை பொதுச்செய லாளரிடம் இந்த அறிவிப்பை வழங்கினர்.
சட்டப்பிரிவுகள்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324(5), 124(4) மற்றும் 2023-ஆம் ஆண்டின் தேர்தல் ஆணையர்கள் பணி நிபந்தனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளின் பின்னணி
தலைமைத் தேர்தல் ஆணையர் மீது ஒன்பது குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன. இது குறித்து ஜெயராம் ரமேஷ் கூறியதாவது:
‘‘2026 மார்ச் 15 ஆம் தேதிக்குப் பிறகு ஞானேஷ் குமார் மேற்கொண்ட செயல்பாடுகள் மற்றும் முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஏப்ரல் 18 அன்று பிரதமர் ஆற்றிய உரை, தேர்தல் நடத்தை விதிமீறல் என புகார் அளித்தும், அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பா.ஜ.க. அளிக்கும் புகார்கள் மீது மட்டும் மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார் அவர்.
அரசியலமைப்புச்
சட்ட ரீதியான நகர்வு
தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய மாநிலங்களவையில் குறைந்தது 50 உறுப்பினர்களின் கையொப்பம் தேவை என்ற நிலையில், தற்போது 73 பேர் கையெழுத்திட்டுள் ளனர்.
இந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறை வேற்றப்பட்டால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு ஞானேஷ் குமார் பதவியில் இருந்து நீக்கப்படுவார். முன்னதாக இதே போன்ற அறிவிப்புகளை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணனும் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தத் தாக்கீது, டில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
