சென்னை, ஏப்.24 தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளி லும் நேற்று (23.4.2026) வாக்குப் பதிவு அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி சென்னையில் ஒட்டுமொத்தமாக 83.73 சதவீத வாக்குகள் பதிவாகி யுள்ளன.
மொத்த தொகுதிகள்: 16 வாக் காளர்கள் எண்ணிக்கை: 28,93,505
வாக்குச்சாவடிகள்: 4,085 (975 இடங்களில்) பணியாளர்கள்: 19,604 வாக்குச்சாவடி அலு வலர்கள் வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பலத்த பாதுகாப்புடன் மூன்று முக்கிய மய்யங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் அறைகள் சீல் வைக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மய்யம் உள்ளடங்கிய தொகுதிகள்ராணி மேரி கல்லூரிஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி லயோலா கல்லூரி கொளத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர், எழும்பூர், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் அண்ணா பல்கலைக்கழகம் தியாகராய நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி மூன்றடுக்கு பாதுகாப்பு வளையம்:பாதுகாக்கப்பட்ட அறைகளைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. கண்காணிப்பு: 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. கட் டுப்பாட்டு அறை: ஒவ்வொரு மையத்திலும் பிரத்யேக கட் டுப்பாட்டு அறைகள் அமைக்கப் பட்டுள்ளன.முகவர்கள்: தேர்தல் ஆணையத்தின் அடையாள அட்டை வைத்திருக்கும் முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்.
வாக்கு சதவீத நிலவரம்: சென்னையில் உள்ள 16 தொகுதி களில்: 12 தொகுதிகளில்: 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு .4 தொகுதிகளில்: 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு.” வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன.
மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை இந்த மூன்றடுக்கு பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு நடைமுறையில் இருக்கும்,” என உயர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
.மாநகராட்சி சார்பில் குடிநீர், நிழற்பந்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மற்றும் தன்னார் வலர்கள் உதவி என அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்த தால், பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

