பகுத்தறிவாளர் கழக மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு….

ஏப்ரல் 29 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது பிறந்த நாளினை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு அனைத்து பகுத்தறிவாளர் கழக மாவட்டங்களிலும் புரட்சிக்கவிஞர் விழாவை  கருத்தரங்கம், கவியரங்கம், மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி என பல வகையில் நடத்திட  வேண்டுகிறோம்.

ஏப்ரல் 30க்குள் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழாவை நடத்தி முடித்திட வேண்டுகிறோம்.

இது தொடர்பான நடவடிக்கைகளை விடுதலைக்கு செய்தியாக அனுப்பிடவும், பகுத்தறிவாளர் கழக தலைமைக்கு தெரிவிக்கவும் வேண்டுகிறோம்

மேலும் பகுத்தறிவாளர் கழகம் சார்பா ன   விளம்பர துண்டறிக்கைகளில் அய்யா, அம்மா, ஆசிரியர், பகுத்தறிவாளர் கழக இலட்சினை மேல்பகுதியிலும், இந்திய அரசமைப்புச்சட்டம் 51A[H] சட்டப்பிரிவு  இறுதியிலும் இடம்பெற வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51 A [ H ]

‘இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மை [SCIENTIFIC TEMPER], மனித நேயம் [HUMANISM], ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டு ஆராயும் திறன் [SPIRIT OF INQUIRY], சீர்திருத்தம் [REFORM] ஆகியவற்றை வளர்ப்பது இன்றியமையாத முக்கிய கடமையாகும்’ என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51 A [ H ] கூறுகிறது.

– பகுத்தறிவாளர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *