இங்கிலாந்து : இனி 2008-க்கு பின் பிறந்தவர்கள் சிகரெட் வாங்க வாழ்நாள் தடை சிகரெட்டையே தடை செய்வது – அதனினும் சிறந்ததே!

புதுடில்லி, ஏப்.23  2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் சிகரெட் வாங்க வாழ்நாள் தடையைக் கொண்டுவரும் மசோதா ஒன்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புகைப்பழக்கமில்லா தலைமுறையை உருவாக்க இந்தப் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிரிட்டனில் 17 வயது மற்றும் அதற்குக் குறைந்த வயதுடையவர்கள் சிகரெட் வாங்குவதைத் தடை செய்யும் மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்படி, 2009-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குக்குப் பிறகு பிறந்தவர்கள் யாரும் (தற்போது 17 வயதானவர்கள்) சிகரெட் வாங்க முடியாது. பிரிட்டனின் இந்த மசோதாவுக்கு ‘புகையிலை மற்றும் வேப்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் கூறும்போது, “நாட்டின் சுகாதார வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். இது புகைப்பழக்கமற்ற முதல் தலைமுறையை உருவாக்க வழிவகுக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2022-ஆம் ஆண்டில், புகைப்பிடித்தலுக்கு எதிராக இத்தகைய சட்டத்தை இயற்றிய முதல் நாடாக நியூசிலாந்து திகழ்ந்தது. இச்சட்டத்தின் மூலம், 2008-க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டது.

ஆனால், இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஓராண்டுக்கும் குறைவான காலத்திலேயே, நவம்பர் 2023-இல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ரத்து செய்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், 2007-ஆம் ஆண்டு ஜனவரி 1-க்குப் பிறகு பிறந்த எவருக்கும் சிகரெட் விற்பனை செய்வதை மாலத்தீவு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *