“நீட் தேர்வு முறையை ரத்து செய்க” முதலமைச்சர் விஜய்யை குறிப்பிட்டு ராஜ் தாக்கரே வலியுறுத்தல்

மும்பை, மே 16 நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டுமென மகாராட்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள சமூக வலைதள பதிவில் நீட் தேர்வு முறையை ரத்து செய்வது தொடர்பாக முதலமைச்சர் விஜய்யின் நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளார்.
“அண்மையில் தேசிய அளவில் நடை பெற்ற மருத்துவ கல்வி சேர்க்கைக்கான நீட் தேர்வு, வினாத்தாள் கசிந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் நீட் தேர்வுக்கு பயிற்சியில் அளிக்கும் நிறுவனங்கள் சில கூட்டு களவாணிகளாக உள்ளனர். இதற்கு முன்பு கடந்த 2024-இல் நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த போது ஒன்றிய அரசு செய்தது என்ன? தேர்வை ரத்து செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
நீட் தேர்வு முறையே தேவையற்றது. இதை கடந்த 2016 முதல் நான் சொல்லி வருகிறேன். இந்த தேர்வு பணம் படைத்தவர்களுக்கானதாக உள்ளது. தென் மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு இதைத்தான் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் விஜய்யும் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதற்கான முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் ஐந்து தென் மாநிலங்களில் (மகாராட்டிரா உட்பட) மொத்தம் 350 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதுவே வட பகுதியில் உள்ள பெரிய மாநிலங்களில் 180 மருத் துவக் கல்லூரிகள்தான் உள்ளன. இதன் மூலம் வட மாநிலங்களை மாணவர்கள், தென் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பலன் அடைகின்றனர்.அத னால் இந்த நீட் தேர்வு முறையை ரத்து செய்துவிட்டு, இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல் நீட் தேர்வில் முறைகேடு அரங்கேறி வரும் சூழலில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந் திர பிரதான், தனது பதவியில் இருந்து விலக வேண்டும். மேலும், மகாராட்டிரா மாநில அமைச்சர்கள் தென் மாநிலங்களுடன் இணைந்து நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டி குரல் கொடுக்க வேண்டும்” என ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *