‘மக்களவைத் தொகுதி வரையறை மசோதாதான்’ தோற்கடிக்கப்பட்டது; மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அல்ல

1 Min Read

காங்கிரஸ்
விளக்கம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

புதுடில்லி, ஏப்.20 மக்களவையில் தோற் கடிக்கப்பட்டது தொகுதி வரையறை தொடர்பான மசோதாவே தவிர, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அல்ல என்று காங்கிரஸ் கட்சி விளக் கம் அளித்துள்ளது. மேலும், தற்போதைய மக்களவை பலத்தின் அடிப்படையிலேயே பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உட னடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர் பாளர் சுப்ரியா சிறீநேத்தே நேற்று  (19.4.2026) செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

“மகளிர் இட ஒதுக் கீடு மசோதா தோற்கடிக்கப் படவில்லை. நீங்கள் (ஒன்றிய அரசு) நாட்டின் மீது திணிக்க விரும்பிய அந்தத் தொகுதி வரை யறை மசோதாதான் தோற்கடிக்கப்பட்டது. பெண்களுக்கான உரிமையை வழங்குவதில் தேவையற்ற தாமதத்தை அரசு ஏற்படுத்தக் கூடாது.”

உடனடி அமலாக்கம்: மக்கள் தொகை கணக் கெடுப்பு மற்றும் தொகுதி வரையறைக்காகக் காத்திருக்காமல், தற்போ தைய மக்களவை உறுப்பினர்களின் எண் ணிக்கையை அடிப்படை யாகக் கொண்டு இட ஒதுக் கீட்டை நடைமுறைப் படுத்த வேண்டும். அரசின் மீது விமர்சனம்: இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு இரட்டை நிலையை கடைப்பிடிக்கிறது.

பெண்களுக்கான அதிகாரப் பகிர்வில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. அதைச் செயல்படுத்தும் முறை யிலேயே தங்களுக்கு உடன்பாடு இல்லை.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *