டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் தேர்வர் முதலிடம் பிடித்து சாதனை!

1 Min Read

சென்னை, ஏப்.20– தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப் 1 மற்றும் 1ஏ பிரிவில் காலியாக இருந்த 80 பணியிடங்களுக்கான இறுதி தரவரிசைப் பட்டி யலை வெளியிட்டது. இதில் எம்.சுப்பிரமணியன் என் பவர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்காக நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வின் முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் 1.81 லட்சம் பேர் பங்கேற்றனர்.

முதன்மைத் தேர்வு: டிசம்பர் 1 முதல் 4ஆம் தேதி வரை நடந்த இந்தத் தேர்வை 1,568 பேர் எழுதினர்.

நேர்முகத் தேர்வு: மார்ச் 30இல் தேர்வு முடிவுகள் வெளியாகி, தகுதி பெற்ற 160 பேருக்கு ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.நேர்முகத் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்:

முதலிடம்: எம்.சுப்பிரமணியன். இரண்டா மிடம்: எஸ்.திவ்யலட்சுமி. மூன்றாமிடம்: வி.பிரதீப்.

முக்கிய அம்சம்: கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 11 ஆண்டுகள் கழித்து குரூப் 1 தேர்வில் ஆண் தேர்வர் ஒருவர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்வர்கள் தங்களது விரிவான மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியலை தேர் வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in-ல் சரிபார்த்துக் கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *