தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்க முடியாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஏப்.18 இந்தியாவில் தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாய மாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரி வித்துவிட்டது.

தேர்தல் நேரங்களில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், நாட்டில் உள்ள அனைத்துத் தகுதியுள்ள குடிமக்களும் வாக்களிப்பதைக் கட் டாயமாக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன:

தேர்தலில் வாக்களிப்பதைச் சட்டப்பூர்வமாகக் கட்டாயமாக்க வேண்டும். வேண்டுமென்றே வாக்களிக் காமல் இருப்பவர்களுக்கு, அரசின் நலத் திட்டங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுவதிலிருந்து தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கோரிக்கையை நிராகரித்ததோடு சில முக்கியக் கருத்துகளைப் பதிவு செய்தனர்:

அரசின் கொள்கை முடிவு: தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவது என்பது அரசின் கொள்கை சார்ந்த விசய மாகும்.  இதில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது.

நாடாளுமன்ற அதிகாரம்: இது தொடர்பாகச் சட்டங்களை இயற்றுவதோ அல்லது விதிகளை மாற்றுவதோ நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இந்தத் தீர்ப்பின் மூலம், இந்தியாவில் வாக்களிப்பது என்பது ஒரு குடிமகனின் உரிமையாகவும் கடமையாகவும் தொடருமே தவிர, அதைச் சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்த முடியாது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *